பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதலருடன் கலந்துகொண்ட சுருதிஹாசன்

0
96

கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

ஒரு பக்கம் அரசியலிலும் இன்னொரு பக்கம் பிக்பாஸ் டிவி நிகழ்ச்சிஇ விஸ்வரூபம் 2 படத்தின் வெளியீடு, சபாஷ் நாயுடு, இந்தியன் 2 படங்கள் என சினிமாவிலும் கால் ஊன்றியபடியே உள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 படத்தில் இடம்பெற்ற ‘ஞாபகம் வருகிறதா’ பாடல் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களில் ஒருவர் சினிமாவை விட்டுவிட்டு முழுநேர அரசியலுக்கு செல்ல வேண்டாம் என்று கமலிடம் கேட்டுக் கொண்டார்.

அதற்கு பதில் அளித்து கமல் நான் சினிமாவை விட்டு விலகி போகமாட்டேன். நடித்தால்தான் சினிமாவா? உங்களில் ‘ஒருவனாக’ அமர்ந்து சினிமாவை பார்த்துக்கொண்டுதான் இருப்பேன். அதை விடவும் ஒரு பெரிய பணியில் ஈடுபட விரும்புகிறேன்.

எனக்குப் பிறகு நிறைய கலைஞர்கள் வருவார்கள். அவர்களுக்கு வழிவிடுவது தான் முதிர்ச்சி. என் முன்னோர்கள் அப்படித் தான் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

இது தியாகம் எல்லாம் இல்லை. “என் சீட்ல உக்காருன்னு” உத்தமவில்லன் படத்துல வர்ற காட்சியை பாலச்சந்தர்தான் எழுதினார். மறுபடியும் மறுபடியும் சினிமாவில் நடிக்கக் கேட்டு என்னை சஞ்சலப்படுத்தி விடாதீர்கள்”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த விஸ்வரூபம் 2 பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் சுருதிஹாசனின் காதலர் மைக்கேலும் கலந்துகொண்டார்.

சுருதிஹாசனும் லண்டனை சேர்ந்த நடிகரான மைக்கேல் கார்சலும் காதலித்து வருவதாகவும் அவர்கள் காதலுக்கு கமல்ஹாசன் சரிகா இருவருமே சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் செய்தி வந்தது. இடையில் இருவரும் பிரிந்ததாகவும் தகவல் வந்தது.

இந்தநிலையில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த பாடல் வெளியீட்டில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். ஸ்ருதிஹாசன் மேடையில் பாடியதை மைக்கேல் முதல் வரிசையில் அமர்ந்து ரசித்தார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.