மீண்டும் தோன்றும் நெருக்கம்!! – கபில் (கட்டுரை)

0
727

இரா.சம்­பந்­த­னுக்கும் விக்­னேஸ்­வ­ர­னுக்கும் இடையில் இது­வ­ரையில் பகி­ரங்­க­மான மோதல்கள் இருந்­த­தில்லை.

முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் அவ்­வப்­போது தனது உரையில் கூட்­ட­மைப்பின் தலை­மையை விமர்­சித்­தி­ருந்­தாலும், இரா.சம்­பந்­தனின் பெயரைக் குறிப்­பிட்டு அத்­த­கைய விமர்­ச­னங்­களைச் செய்­த­தில்லை.

அது­போ­லவே, இரா.சம்­பந்தன் ஒரு­போதும், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனை விமர்­சிக்­கவோ, அவரைக் குறை கூறும் வகை­யிலோ நடந்து கொள்­ள­வில்லை

தமிழ் அர­சியல் பரப்பில் அண்­மையில் மிகவும் உன்­னிப்­பாக நோக்­கப்­பட்ட ஒரு நிகழ்வு, யாழ்ப்­பா­ணத்தில் நடந்த “நீதி­ய­ரசர் பேசு­கிறார்” என்ற நூல் வெளி­யீடு தான்.

வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனின் உரைகள் அடங்­கிய தொகுப்பு தான் இந்த நூல்.

அந்த நூல் வெளி­யீட்டு நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­தனும் பங்­ கேற்பார் என்­பது சில நாட்­க­ளுக்கு முன்­னரே உறுதி செய்­யப்­பட்டு விட்­டதால் தான் அத்­தனை கவ­னிப்பு காணப்­பட்­டது.

முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுக்கும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் குறிப்­பாக, தமி­ழ­ரசுக் கட்­சிக்கும் இடை­யி­லான இடை­வெளி மிகவும் அதி­க­ரித்­தி­ருந்த ஒரு சூழலில், தான் இந்த நிகழ்வு இடம்­பெற்­றி­ருந்­தது.

பொது­வா­கவே, அர­சி­யலில் மாத்­தி­ர­மன்றி வாழ்­வி­யலில் கூட, விழாக்கள் தான் பல­ரது மனங்­களை இணைய வைப்­ப­துண்டு. பிரிந்­தி­ருக்கும் குடும்­பங்கள் கூட, திரு­மண விழாவில் அல்­லது மரணச் சடங்கில் இணைந்து கொள்­வது வழக்கம்.

அது­போல தான், அண்­மைக்­கா­ல­மாக அர­சி­யலில் துருவ நிலைப்­பட்டு வந்த இரா.சம்­பந்­தனும், விக்­னேஸ்­வ­ரனும், இந்த நூல் வெளி­யீட்டு விழாவில் ஒன்­றாகப் பங்­கேற்­றார்கள்.

அதிலும் சிறப்­பான விடயம் என்­ன­வென்றால், முத­ல­மைச்­சரின் அழைப்பின் பேரில் தான், அவ­ரது நூலை வெளி­யி­டு­வ­தற்கு வந்­தி­ருந்தார் சம்­பந்தன்.

சம்­பந்­தனின் வரு­கையை மாத்­திரம் எதிர்­பார்த்­தி­ருந்த பல­ருக்கும், அந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் முக்­கிய பிர­மு­கர்கள் பலரும் பங்­கேற்­றது தான், அதை­விட ஆச்­ச­ரியம்

குறிப்­பாக, முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுக்கு எதி­ரான கடு­மை­யான நிலைப்­பாட்டை எடுத்து அவ­ருடன் முட்டி மோதி வந்த, பாராளுமன்ற உறுப்­பினர் சுமந்­திரன், அவ­ருக்கு நெருக்­க­மா­ன­வர்கள் என்று கூறப்­படும் யாழ். மாந­கர முதல்வர் ஆர்னோல்ட், மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள் சயந்தன், அஸ்மின் போன்­ற­வர்கள் இந்த நிகழ்­வுக்கு வந்­தி­ருந்­தார்கள்.

மாவை சேனா­தி­ராசா, செல்வம் அடைக்­க­ல­நாதன், தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன் என்று கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­களின் தலை­வர்கள் மாத்­தி­ர­மன்றி, ஈ.பி.டி.பி. செய­லாளர் நாயகம் டக்ளஸ் தேவா­னந்­தாவும் கூட அங்கு வந்­தி­ருந்தார்.

தமி­ழ­ரசுக் கட்­சி­யினர் முத­ல­மைச்­சரின் நிகழ்வில் பங்­கேற்­றது, அர­சி­யலில் புதிய திருப்­பத்தை ஏற்­ப­டுத்தும் என்று எதிர்­பார்ப்போர், ஒரு புறத்தில் இருக்க, அவ்­வா­றாயின் டக்ளஸ் தேவா­னந்­தாவும் தான் வந்­தி­ருந்தார் என்­பதால், அவ­ருடன் முத­ல­மைச்சர் இணங்கிப் போகிறார் என்று அர்த்­தமா? என்று பதில் கேள்வி எழுப்­பு­வோரும் உளர்.

ஆனால் இதற்­கான பதிலை முத­ல­மைச்சர் தனது பதில் உரையில் தெளி­வா­கவே கூறியி­ருக்­கிறார்.

டக்ளஸ் தேவா­னந்தா மற்றும் தேசியக் கட்­சி­க­ளுடன் உற­வுகள் இருந்­தாலும் அவர்களுடன் நீண்ட கால நோக்கில் இணைந்து பய­ணிக்க முடி­யாது என்று தெளி­வாக கூறி­யி­ருந்தார்.

அது­போன்று வெட்டு ஒன்று துண்டு இரண்டு பாணியில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பற்றி அவர் எந்தக் கருத்­தையும் வெளிப்­ப­டுத்­த­வில்லை.

இரா.சம்­பந்தன் தனது உரையில், தமிழர் தரப்­புக்குள்- (அவர் குறிப்­பிட்­டது தமிழ்த் தேசி­யத்தை முன்­னி­றுத்தி செயற்­படும் கட்­சி­க­ளுக்குள்), ஒற்­றுமை முக்­கியம். அந்த ஒற்­றுமை குலைந்து பிள­வு­பட்டால், எமது மக்­களை நாமே அழி­வுக்குள் தள்­ளி­ய­தாக அமைந்து விடும் என்று கூறி­யி­ருந்தார்.

இரா.சம்­பந்­தனின் அந்தக் கருத்து ஒற்­று­மையின் அவ­சி­யத்தை முத­ல­மைச்­ச­ருக்கு மாத்­தி­ர­மன்றி, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் உள்ள, விக்­னேஸ்­வ­ர­னுக்கு எதி­ரான அணி­யி­ன­ருக்கும் சேர்த்தே கூறி­ய­தாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உண்­மையில் இரா.சம்­பந்­த­னுக்கும், விக்­னேஸ்­வ­ர­னுக்கும் இடையில் இது­வ­ரையில் பகி­ரங்­க­மான மோதல்கள் இருந்­த­தில்லை.

முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் அவ்­வப்­போது தனது உரையில் கூட்­ட­மைப்பின் தலை­மையை விமர்­சித்­தி­ருந்­தாலும், இரா.சம்­பந்­தனின் பெயரை குறிப்­பிட்டு அத்­த­கைய விமர்­ச­னங்­களைச் செய்­த­தில்லை.

rss-arasiyalஅது­போ­லவே, இரா.சம்­பந்தன் ஒரு­போதும், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனை விமர்­சிக்­கவோ, அவரைக் குறை கூறும் வகை­யிலோ நடந்து கொள்­ள­வில்லை.

அவர்­க­ளுக்­கி­டையில், “அன்­புக்­கு­ரிய விக்கி” – “அன்­புக்­கு­ரிய சாம் ” என்று விளிக்கும் உறவு நிலை, கட்­சி­யினர் மத்­தியில் இருந்த வேற்­று­மை­க­ளுக்கும் அப்பால் நீடித்தே வந்­தது.

‘கொடுத்த கையைக் கடிக்கும் பழக்கம்‘ தனக்­கில்லை என்று முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் இந்த மேடையில் இரா.சம்­பந்­தனைப் பார்த்து தான் கூறி­யி­ருந்தார்.

தன்னை அவர் தான் அர­சி­ய­லுக்கு கொண்டு வந்து முத­ல­மைச்­ச­ராக்­கினார் என்ற நன்­றிக்­க­டனை மறக்க அவர் தயா­ரில்லை.

ஆனாலும், சம்­பந்­தனின் ஒற்­று­மை­யாக பய­ணிக்க வேண்டும், பிரிந்து போனால் அழி­வையே மக்­க­ளுக்கு கொடுப்போம் என்ற எச்­ச­ரிக்­கைக்கு அவர் பதி­ல­ளிக்­கவும் தவ­ற­வில்லை.

ஒற்­றுமை முக்­கியம் தான், ஆனால் அது உய­ரிய கொள்­கையின் வழியில் இருக்க வேண்டும் என்ப தே முத­ல­மைச்­சரின் நிலைப்­பாடு.

அதை­விட, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் இருந்து வெளி­யே­றிய கட்­சி­க­ளையும் இணைத்துக் கொண்டு பய­ணிக்க வேண்டும் என்­பதை அவர் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கிறார்.

ஏற்­க­னவே, இந்த விழா­வுக்கு சில நாட்கள் முன்­ன­தாக, முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனை, ரெலோ தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன் சந்­தித்துப் பேச்சு நடத்­தி­யி­ருந்தார்.

அப்­போதும், கூட்­ட­மைப்பை உடை­யாமல் பாது­காக்க வேண்டும் என்ற கோரிக்­கையை செல்வம் அடைக்­க­ல­நாதன் வலி­யு­றுத்­திய போது, கஜேந்­தி­ர­குமார் தரப்­பையும் மீண்டும் கூட்­ட­மைப்பில் இணைத்துக் கொண்டு பய­ணித்தால், தனிக்­கட்சி தொடங்க வேண்­டிய அவ­சியம் ஏற்­ப­டாது என்ற கருத்தை முத­ல­மைச்சர் கூறி­ய­தாக ஒரு தக­வலும் உள்­ளது.

IMG_1155-750x430தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் தமி­ழ­ரசுக் கட்­சியில் ஒரு பகு­தியில் முத­ல­மைச்சர் விக்.னேஸ்­வ­ர­னுக்கு எதி­ரான நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருந்­தாலும், பங்­காளிக் கட்­சிகள் மத்­தியில் அத்­த­கைய நிலைப்­பாடு இல்லை.

முன்னர், வட மாகாண அமைச்­சர்கள் நிய­ம­னத்தின் போது- ரெலோவின் முடி­வுக்கு மாறாக, குண­சீ­லனை சுகா­தார அமைச்­ச­ராக விக்­னேஸ்­வரன் நிய­மித்­தி­ருந்தார். அப்­போது அவ­ருடன் ரெலோ முரண்­பட்­டது. அவரை இந்த முறைக்கு மாத்­தி­ரமே முத­ல­மைச்­ச­ராகத் தொடர்­வ­தற்கு ஆத­ரிப்போம் என்றும் கூறி­யது.

ஆனால் இப்­போது அதே ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன் தனி­யாகச் சந்­தித்து கூட்­ட­மைப்பின் சார்­பி­லேயே மீண்டும் போட்­டி­யிட வேண்டும் என்று கோரி­யி­ருக்­கிறார்.

அது­போ­லவே, புளொட் தலைவர் சித்­தார்த்­தனும் கூட விக்­னேஸ்­வரன் தனிக் கட்­சியை அமைத்தோ, தனி­யான கூட்­ட­ணியை அமைத்தோ போட்­டி­யிட்டால், அது தமி­ழ­ருக்கே பின்­ன­டைவு என்று கூறி வரு­கிறார்.

எனவே, விக்­னேஸ்­வ­ர­னுக்கு கூட்­ட­மைப்­புக்குள் இன்­னமும் ஆத­ரவுத் தளம் இருக்­கி­றது என்­பது மறுப்­ப­தற்­கில்லை.

விக்­னேஸ்­வரன் தனிக் கட்சி அமைத்தால் தம்­மிடம் உள்ள பலர் அவ­ருடன் சென்று விடக்­கூடும் என்ற பயமும், கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­க­ளிடம் இருக்­கி­றது.

இவை எல்­லா­வற்­றையும் விட, வடக்கு மாகா­ண­சபைத் தேர்­தலில் தமிழ்த் தேசிய அர­சியல் கட்­சிகள் தனித்­த­னி­யாக பிரிந்து போட்­டி­யிட்டால், அது தமிழ்த் தேசிய விரோதக் கட்­சி­க­ளுக்கும், சிங்­களப் பேரி­ன­வாதக் கட்­சி­க­ளுக்கும் வாய்ப்பைக் கொடுத்து விடுமோ என்ற அச்­சமும் தோன்­றி­யி­ருக்­கி­றது.

இந்­த­நி­லையில் தான், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் உள்ள தமி­ழ­ரசுக் கட்சி உள்­ளிட்ட பங்­காளிக் கட்­சி­களும் சரி, முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனும் சரி, முன்­னைய கடும் நிலைப்­பா­டு­களில், இருந்து தளரத் தொடங்­கி­யி­ருப்­ப­தாகத் தெரி­கி­றது.

மீண்டும் விக்­னேஸ்­வ­ரனை முத­ல­மைச்­ச­ராக கூட்­ட­மைப்பு சார்பில் முன்­னி­றுத்­து­வ­தற்கு தமி­ழ­ரசுக் கட்­சியும் கூட பச்­சைக்­கொடி காண்­பிக்கும் சாத்­தி­யங்­களை மறுக்க முடி­யாது.

ஆனாலும், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் இந்த இடத்தில் ஒரு நிபந்­த­னையை முன்­வைப்­பதை அவ­தா­னிக்க முடி­கி­றது. கொள்கை அடிப்­ப­டையில் இணைந்து செயற்­பட வேண்டும் என்­பதே அது.

அவர் கொள்கை அடிப்­ப­டை­யி­லான இணக்­கப்­பாடு என்று, கூறு­கின்ற விடயம், தமிழ்த் தேசிய அர­சியல் கட்­சிகள் அனைத்­தையும் அர­வ­ணைத்துச் செயற்­ப­டு­வ­தா­கவே தென்­ப­டு­கி­றது.

குறிப்­பாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி, ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகி­ய­வற்­றையும் மீண்டும் இணைத்துக் கொண்டு செயற்­படும் அந்த நிபந்­த­னையைத் தான் அவர் முன்­னி­றுத்த முனை­கிறார்.

தமி­ழ­ரசுக் கட்சி இந்த விட­யத்தில் எவ்­வாறு பதி­ல­ளிக்கப் போகி­றது என்­பதை பொறுத்­தி­ருந்தே பார்க்க வேண்டும்.

ஆனால், தமி­ழ­ரசுக் கட்சி தரப்பில் சற்று விட்­டுக்­கொ­டுப்­புகள் தென்­ப­டு­கின்­றன. அது எந்­த­ள­வுக்கு இருக்கும் என்­பதை காலம் தான் பதி­ல­ளிக்க வேண்டும்.

தமி­ழ­ரசுக் கட்சி விட்­டுக்­கொ­டுப்­பு­க­ளுடன் இறங்கி வந்தால், அதற்கு கஜேந்­தி­ர­குமார் தரப்பு எந்­த­ள­வுக்கு இணங்கும், என்­பது இன்­னொரு கேள்­விக்­கு­ரிய விடயம்.

ஏனென்றால் உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி, அதி­க­ளவு ஆச­னங்­களைப் பெற்­றி­ருக்­கி­றது.

தம்மை மாற்று அணி­யாக உரு­வாக்கும் முனைப்பில் உள்ள அந்த அணி, மீண்டும் கூட்­ட­மைப்­புக்குள் தம்மைக் கரைத்துக் கொள்ள இணங்­குமா என்­பது சந்­தேகம் தான்.

அதே­வேளை, முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை உடைத்துக் கொண்டு வெளியே வரப் போவ­தில்லை என்றே தெரி­கி­றது, கொடுத்த கையைக் கடிக்கும் பழக்கம் தன்­னிடம் இல்லை என்று அவர் கூறி­யி­ருக்­கிறார்.

செல்வம் அடைக்­க­ல­நா­த­னிடம் கூட, தமிழரசுக் கட்சியினர் தம்மை வேட்பாளராக நிறுத்துவார்களா என்றே கேட்டதாக கூறப்படுகிறது.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவருக்கு வேட்புமனுவை நிராகரிக்கும் வகையில், நடந்து கொண்டால் தான், முதலமைச்சர் விக்னேஸ்வரனால் எதிர்த்துக் களமிறங்க முடியும்.

மாறாக, அவருக்கு வாய்ப்பளிக்க முன்வந்தால் அவர் அதனை எவ்வாறு எதிர்கொள்வார் என்ற கேள்வியும் உள்ளது.

இந்தக் கட்டத்தில் கூட்டமைப்பை விட்டு வெளியேற்றப்படாமல்- அடுத்த கட்ட அரசியலைத் தீர்மானிக்க முடியாத சூழலும் அவருக்கு உள்ளது.

எது எவ்வாறாயினும், சில வாரங்களுக்கு முன்னர், தென்பட்ட முரண்பாட்டு நிலைகளில் இருந்து இரண்டு தரப்புகளும் மெல்ல மெல்ல விலகுவதாக தெரிகிறது,

இந்த நெருக்கத்தை பலரும் விரும்புகிறார்கள். அதேவேளை இதனை அதிர்ச்சியோடும், வெறுப்போடும் பார்க்கின்ற தரப்புகளும் இருக்கத் தான் செய்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

– கபில்-

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.