8-வது மாடியிலிருந்து குதித்து 14 வயது சிறுமி தற்கொலை: தடுக்கும் முயற்சி தோல்வி; வைரலான வீடியோ

0
228

மும்பையின் மேற்கு புறநகர்ப்பகுதியான கண்டிவாலியில் அடுக்குமாடிக் குடியிருப்பின் 8-வது மாடியிலிருந்து சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பாகியுள்ளது.

வியாழன் மாலை தாக்கூர் கிராமத்தில் கார்டினியா கூட்டுறவுக் குடியிருப்பு சங்கக் கட்டிடத்தில் இந்தப் பயங்கரம் நடந்துள்ளது.

இது குறித்து விபத்து மரணம் என்று இப்போதைக்குப் பதிவு செய்துள்ள போலீஸ்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஹர்ஷிகா திரேந்திர மாயாவஷி என்ற இந்த 14 வயது சிறுமி 8வது மாடியிலிருந்து விழுந்து இறந்துள்ளார், இவர் குடியிருப்பின் 5வது மாடியில் வசித்து வந்தார்.

இந்தச் சிறுமி 8வது மாடியில் நின்று கொண்டிருந்த போது பார்த்த அக்கம்பக்கதினர் சிலர் கீழே இறங்குமாறு பதற்றத்துடன் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் கீழே குதித்து விட்டார்.

கீழே விழுந்தவுடன் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இந்த ஒட்டுமொத்தச் சம்பவத்தையும் பார்த்த சிலர் உடனடியாக அதனை வீடியோ பிடித்து சமூகவலைத்தளங்களில் வெளியிட அது வைரலாகியுள்ளது.

போலீஸ் அதிகாரி கூறும்போது, “தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை, விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது, பெண்ணின் நண்பர்கள், உறவினர்களை விசாரித்து வருகிறோம். அவரது மொபைல் போன் தொடர்புகளையும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளோம்.

மேலும் சமூகவலைத்தளத்தில் இந்தப் பெண்ணின் நடவடிக்கை என்னவென்பதையும் போலீஸ் ஆராய்ந்து வருகிறது.

ஆனால் இதுவரை விபத்து மரண அறிக்கைதான் இப்போதைக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.