இந்த வார (ஜூன் 29 – ஜூலை 5) பலன்கள்: இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகரிக்கும்?

0
687

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (ஜூன் 29 – ஜூலை 5) பலன்களை  ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

தன லாபத்தையும் பொருள் சேர்க்கையையும் அடைவீர்கள். கீர்த்:தி உண்டாகும். எடுத்த காரியங்கள் இனிதே நிறைவேறும். இதனால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். உங்களுக்கு எதிராகத் தொடர்ந்த வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிட்டும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் பாராட்டும் வகையில் நடந்து கொள்வர். பதவி உயர்வும் ஊதிய உயர்வும் பெறுவர். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் லாபகரமாக முடியும். உங்களின் புதிய முதலீடுகள் வெற்றியைத் தேடித் தரும். விவசாயிகளுக்கு மகசூல் பெருகும். விவசாய உபகரணங்களை வாங்கி மேலும் முன்னேற்றம் அடையும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

அரசியல்வாதிகள் வெற்றியைக் காண்பார்கள். சிலருக்குப் புதிய பதவிகளும் வந்து சேரும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவும் அதிகரிக்கும். பெண்மணிகள் கணவருடன் ஒற்றுமையோடு இருப்பது அவசியம். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். சிலருக்கு வெளிநாடு சென்று கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

பரிகாரம்: மதுரை மேலவீதியில் உள்ள “இம்மையிலும் நன்மை தரும்’ கோயிலுக்குச் சென்று வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 29,30.

சந்திராஷ்டமம்: இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

யோக பாக்கியங்கள் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தடைகள் விலகும். பழைய கடன்களை செலுத்தி விடுவீர்கள். பூர்வீகச் சொத்துகளில் இருந்த தடைகள் விலகும். வீட்டுக்குத் தேவையான உபகரணங்களை வாங்குவீர்கள். உங்கள் செயல்திறன் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றத்துடன் பதவி உயர்வும் கிடைக்கும். சக ஊழியர்களிடம் எதிர்பார்த்த ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் குறையும். விவசாயிகள் காய்கறிகள், கிழங்குகள் எனப் பயிர் செய்து பலன் பெறுங்கள்.

அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். எதிரிகளால் தொல்லை இல்லை என்றாலும் கவனம் தேவை. கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். சக கலைஞர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள்.

பெண்மணிகள் குடும்பத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சியடைவார்கள். வருமானமும் சீராகவே இருக்கும். மாணவமணிகள் கல்வியில் கவனம் செலுத்தவும். மதிப்பெண்கள் பெறுவதற்கு அதிகமாக உழைக்கவும்.

பரிகாரம்: “ஜெய ஜெய துர்க்கா’ என்று ஜபித்தபடி துர்க்கையை வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 30, 1.

சந்திராஷ்டமம்: 29.


மிதுனம் (மிருகசீரிஷம்3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

எடுத்த காரியங்கள் யாவும் மெதுவாகத்தான் வெற்றியைக் கொடுக்கும். பொருளாதாரத்தில் படிப்படியான முன்னேற்றங்கள் ஏற்படும். உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். உடல்நலம் நன்றாக இருக்கும். ஸ்பெகுலேஷன் துறைகளில் எதிர்பார்த்த வருமானங்களைப் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் வேலைகளை முடிக்க முயலுங்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சீராக முடியும். வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சலும் அவற்றின் விற்பனையும் அமோகமாக இருக்கும். புதிய குத்தகைகள் எடுக்கும் எண்ணம் மேவோங்கும்.

அரசியல்வாதிகள் தேவையற்ற பேச்சு மற்றும் அணுகுமுறையால் தொண்டர்களின் அவமதிப்புக்கு ஆளாக நேரிடும். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். பணவரவுக்குக் குறைவு இராது. பெண்மணிகளுக்கு பண வரவு இருக்கும். பேச்சில் கவனம் தேவை. மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள்.

பரிகாரம்: வியாழனன்று குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 29, 2.

சந்திராஷ்டமம்: 30,1.


கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

உடல் ஆரோக்கியமும் மனநலனும் பலப்படும். உறவினர்கள் நேசக்கரம் நீட்டுவர். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். எடுத்த காரியங்கள் எல்லாவற்றையும் தைரியமாக முடிப்பீர்கள். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். மேலதிகாரிகள் புதிது புதிதாய் கிடுக்கிப்பிடி போடுவார்கள். வியாபாரிகளுக்கு அரசாங்கத்தால் சில அனுகூலங்கள் உண்டாகும். தொழிலில் புதிய மாற்றங்கள் தென்படும். விவசாயிகள் எதிர்பார்த்த மகசூல் கிடைத்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவர். கால்நடைகளாலும் நல்ல பலன் கிட்டும்.

அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவர். தொண்டர்களைஅரவணைத்துச் சென்றால் மேலும் நன்மை உண்டு. கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். பணவரவுக்குக் குறைவில்லை. பெண்மணிகளுக்கு இது மகிழ்ச்சிகரமான வாரம். குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். மாணவமணிகள் கல்வியில் முன்னேற அதிகமாக உழைக்க வேண்டி வரும்.

பரிகாரம்: பெருமாள் கோயிலில் தாயாருக்கு தீபமேற்றி வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 30,5.

சந்திராஷ்டமம்: 2, 3, 4.

(மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

கவலைகள் மறைந்து இன்பங்கள் பெருகும். மதிப்பு மரியாதை வளரும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உற்றார் உறவினர்களிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். கவலைகளை மறந்து செயலாற்றுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு இது மகிழ்ச்சியான வாரம். வேலைகளை குறித்த நேரத்தில் முடித்து பாராட்டுகள் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய யுக்திகளைச் செயல்படுத்தி பொருள்களின் விற்பனையை அதிகரிப்பர். இருப்பினும் கூட்டாளிகளிடம் கவனமாக இருக்கவும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். பயிர்பாதிப்பைப் போக்க பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்துவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். உங்களின் திட்டங்கள் நிறைவேறும். கலைத்துறையினர் பல தடைகளைத்தாண்டி புதிய ஒப்பந்தங்கள் செய்வார்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மாணவமணிகள் சுறுசுறுப்புடன் படித்து, நல்ல மதிப்பெண்களை அள்ளுவீர்கள். விளையாட்டிலும் கவனத்துடன் ஈடுபடுவீர்கள்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தரிசனம் உகந்தது.

அனுகூலமான தினங்கள்: 30, 3.

சந்திராஷ்டமம்: 5, 6.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். காரியங்களை நேர்த்தியாக முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகளைப் பெறுவீர்கள். எதிரிகள் ஒதுங்கிப் போவார்கள். பொருளாதாரம் சீராகவே இருந்து வரும். உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள்.

உத்தியோகஸ்தர்கள் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். எதிர்பாராத பதவி உயர்வுகள் தேடிவரும். வியாபாரிகள் புதிய யுக்திகளைப் புகுத்தி, வருமானத்தைப் பெருக்க முனைவர். போட்டி பொறாமைகள் சற்று கூடுதலாக இருப்பதால் கவனமாக இருக்கவும். விவசாயிகளுக்கு கால்நடைகளுக்குப் பராமரிப்புச் செலவு கூடும். புதிய உபகரணங்களை வாங்கி விளைச்சலைப் பெருக்குவீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் எண்ணங்களைப் பூர்த்தி செய்ய முனைவர். கட்சியில் சீர்த்திருத்தம் செய்ய முயற்சி செய்ய வேண்டாம். கலைத்துறையினர் புதிய
ஒப்பந்தங்களைப் பெறுவர். அவர்கள் செயல்களில் சுறுசுறுப்பு கூடும். பெண்மணிகளின் உடல்நலம் பாதிக்கப் படலாம். மாணவமணிகளின் மதிப்பெண்கள் குறையும். ஆனாலும் முயற்சியுடன் படிக்கவும்.

பரிகாரம்: சனிபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் ஒரு சேர வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 1, 2.

சந்திராஷ்டமம்: இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி தேடிவரும். சிலர் எதிர்பாராத பயணங்களைச் செய்ய நேரிடும். இடையூறுகளை மிகவும் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். உடலில் சிறு உபாதைகள் தோன்றி பின்பு சரியாகும். ஆன்மிகச் சிந்தனைகளால் புதிய பலம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் முன்கூட்டியே செயல்படவும். மேலதிகாரிகளிடம் இணக்கமாக நடந்து கொள்ளவும். வியாபாரிகள் கவனத்துடன் ஈடுபட்டால் வருமானத்தை அள்ளலாம். உங்கள் பொருள்களைச் சந்தையில் விற்க எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும். விவசாயிகளுக்கு வருமானம் சீராக இருக்கும். இடைத்தரகர்களிடம் கவனமாக இருக்கவும்.

அரசியல்வாதிகளின் சொல்லுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். கட்சி மேலிடத்திடம் கவனமாக இருக்கவும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதில் சிறுதடைகள் உண்டாகும். பெண்மணிகளுக்கு கணவரிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மாணவமணிகளின் வருங்காலக் கோரிக்கைகள் நிறைவேறும். உடலை உற்சாகமாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சிகளில் ஈடுபடவும்.

பரிகாரம்: “நமசிவாய’ என்று தினமும் 108 முறை ஜபித்து வரவும்.

அனுகூலமான தினங்கள்: 2, 3.

சந்திராஷ்டமம்: இல்லை.


விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

நடக்காது என்று நினைத்திருந்த காரியங்கள் திடீரென்று நடந்து, உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். தந்தையோடு அனுசரித்துச் செல்லவும். வாகனங்கள் ஓட்டும்போது கவனமாக இருக்கவும். உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் அவற்றைச் செவ்வனே செய்து முடிக்கும் ஆற்றல் கிடைக்கும். வியாபாரிகள் இந்த வாரம் நல்ல லாபத்தைக் காணலாம். சிறு தடைகள் ஏற்பட்டாலும் அவற்றைச் சமாளிக்கும் தைரியம் ஏற்படும். விவசாயிகளுக்கு மகசூல் மந்தமாகவே இருக்கும். ஆகவே, புதிய குத்தகைகளை எடுக்க வேண்டாம்.

அரசியல்வாதிகள் எதிரிகளின் தொல்லைகளுக்கு ஆளாக நேரிடலாம். கட்சிமேலிடம் உங்கள் பேச்சைக் கண்காணிக்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள்
செய்வதில் தாமதம் ஏற்படும். யாரிடமும் வெளிப்படையாகப் பழக வேண்டாம்.

பெண்மணிகள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளைக் காண்பார்கள். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். பெற்றோர்களின் ஆதரவு இருக்கும்.

பரிகாரம்: ஸ்ரீ அரங்கநாத சுவாமியை வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 1, 4.

சந்திராஷ்டமம்: இல்லை.

 

(மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

உங்கள் திறமைகள் பளிச்சிடும். குறிப்பிட்ட காலத்திற்குள் வேலைகளை முடித்து விடுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றப்படிகளில் ஏறுவீர்கள். எல்லோருக்கும் உதவி செய்து பெருமைப்படுவீர்கள். பயணங்களாலும் அனுகூலங்களைக் காண்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள். ஆனால் சக ஊழியர்கள் உங்களிடம் பகைமை பாராட்டுவார்கள். வியாபாரிகளுக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும். பழைய கடன்களைத் திருப்பி அடைப்பீர்கள். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் அதிகரிக்கும். புதிய நிலங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அரசியல்வாதிகளின் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். மேலிடத்திடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினரின் திறமைக்கு இந்த வாரம் சவால்கள் உண்டாகலாம். ஆகவே எல்லா விஷயங்களிலும் முத்திரைகளைப் பதிக்க முயற்சி செய்யுங்கள்.

பெண்மணிகள் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு பெறுவார்கள். மாணவமணிகள் அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தவும். பெற்றோர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள்.

பரிகாரம்: திருவேங்கடநாதனை வழிபடுங்கள். நவகிரகங்களைப் பிரதட்சிணம் செய்யவும்.

அனுகூலமான தினங்கள்: 2, 5.

சந்திராஷ்டமம்: இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

உங்களின் முயற்சிகள் யாவும் அனுகூலமான திருப்பத்தைக் கொடுக்கும். பொருளாதாரநிலை சீராக இருக்கும். புதிய வாகனச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் ஆதரவுடன் முக்கிய வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பணவரவு சீராக இருக்கும். சக ஊழியர்களின் சிறுகுறைகளைப் பெரிதுபடுத்த வேண்டாம். வியாபாரிகள் வீண் ஆசாபாசங்களை வளர்த்துக் கொள்ள வேண்டாம். திட்டமிட்ட வேலைகளை ஒத்தி வைக்கவும். விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவார்கள். மகசூல் அதிகரித்து நல்ல லாபத்தைப் பார்ப்பர். பால் வியாபாரத்திலும் லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகளின் பொதுச்சேவையை அனைவரும் பாராட்டுவர். புதிய பொறுப்புகளைப் பெறுவார்கள். கலைத்துறையினர் எல்லா வேலைகளையும் நேர்த்தியாகச் செய்து முடிப்பர். பெண்மணிகள் குடும்பத்தில் நிம்மதி காண்பர். பிறரிடம் பேசும்போது கவனம் தேவை. மாணவமணிகளின் விருப்பத்தைப்பூர்த்தி செய்ய பெற்றோர்கள் முன்வருவார்கள்.

பரிகாரம்: ஞாயிறன்று சிவபெருமானையும் சூரியபகவானையும் வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 4, 5.

சந்திராஷ்டமம்: இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

இடையூறுகள் ஏற்படினும் புத்திசாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். தேவையுள்ள நேரத்தில் நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். திட்டம் தீட்டியது போலவே வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். நீங்கள் கேட்கும் செய்திகள் நிம்மதியைக் கொடுக்கும்.

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேறும். மூத்த அதிகாரிகளும் சக ஊழியர் களும் உங்களுடன் நட்பு பாராட்டுவார்கள். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை அள்ளுவார்கள். புதிய முதலீடுகள் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவர். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபத்தை அள்ளுவார்கள்.

அரசியல்வாதிகளிடம் கட்சி மேலிடம் கருணையுடன் நடந்துகொள்ளும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். கலைத்துறையினருக்கு உயர்ந்தவர்களின் உதவியால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சக கலைஞர்களுடன் தூரப்பயணங்களை மேற்கொள்வீர்கள்.

பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மதிப்பு உயரும். கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகளுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும்.

பரிகாரம்: செந்திலாண்டவரை சஷ்டி கவசம் படித்து வழிபடுங்கள்.

அனுகூலமான தினங்கள்: 3, 5.

சந்திராஷ்டமம்: இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

திட்டமிட்ட வேலைகளை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே முடித்து விடுவீர்கள். பொருளாதார வளம் பெருகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உங்கள் மதிப்பு
மரியாதை கௌரவம் உயரும். வம்பு வழக்குகள் முடிவுக்கு வரவும். அனைவரையும் அரவணைத்துச் செல்லவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு உண்டாகும். வியாபாரிகள் போட்டிகளைச் சமாளித்து தங்களின் பொருள்களை சந்தையில்
விற்பனை செய்வர். கூட்டாளிகளை அரவணைத்துச் செல்லவும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். புதிய குத்தகைகளைப் பெறுவார்கள்.

அரசியல்வாதிகளின் செயல்பாடுகளில் கட்சி மேலிடம் திருப்தி அடையும். இதனால் புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். கலைத்துறையினருக்கு பணவரவு திருப்தியாக
இருக்கும். கை நழுவிப்போன ஒப்பந்தங்கள் உங்களைத் தேடி வரும்.

பெண்மணிகளுக்கு பணப்புழக்கம் நன்றாக இருக்கும். மாணவமணிகள் தங்கள் முயற்சிக்குத் தகுந்தபடி கல்வியில் முன்னேறுவார்கள். எல்லா விளையாட்டுகளிலும் ஈடுபட்டு
வெற்றி அடைவார்கள்.

பரிகாரம்: பட்டீஸ்வரம் துர்க்கையையும் பழனி முருகனையும் வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 30, 5.

சந்திராஷ்டமம்: இல்லை.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.