யாழில் சீரியல் பார்த்த குடும்பப் பெண்ணை பின் கதவால் வந்தவர்கள் கட்டி வைத்து கொடூரம்!!

0
311

யாழ்.கோண்டாவில் பகுதியில் தனது பிள்ளைகளுடன் தொலைக்காட்சியில் மூழ்கியிருந்த குடும்பப் பெண்ணைக் கட்டி வைத்த கொள்ளையர் வீட்டில் பாதுகாப்பாக வாய்க்கப்பட்டிருந்த நாற்பதாயிரம் ரூபா பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை(28) இரவு யாழ்.கோண்டாவில் அன்னங்கை வீதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மேற்படி குடும்பப் பெண் தனது இரு பிள்ளைகளுடன் இணைந்து தொலைக்காட்சியில் நாடகம்(சீரியல்) பார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது வீட்டின் பின்கதவால் வீட்டிற்குள் உள்நுழைந்த கொள்ளையர்கள் குடும்பப் பெண் சத்தமிடாதவாறு அவரது வாய்க்குள் துணியால் அடைத்து,அவரைக் கட்டி வைத்து நாற்பதாயிரம் ரூபா பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.