லேடீஸ் சேலைதான் கட்டோணும்… வேலைலாம் பாக்கோணும்! – பிக்பாஸ் அழிச்சாட்டியங்கள்: பிக்பாஸ் சீசன் 2 : ஒன்பதாம் நாள்!!- (வீடியோ)

0
470

காலையில் ‘வாட் எ கருவாட்’ பாடல் ஒலித்தது. ஏறத்தாழ ஐஸ்வர்யா மட்டுமே தினமும் வந்து முழு எனர்ஜியுடன் ஆடி ஓவியாவை நினைவுப்படுத்துகிறார்.

காலை எட்டரை மணிக்கே பிக்பாஸ் வீட்டில் ஏழரை துவங்கியது. தன் பங்கு உணவை மும்தாஜ் மற்றவர்களுக்குத் தந்தாலும் அவர்கள் ‘வேண்டாம்’ என்று மறுக்க வேண்டுமாம்.

இது மமதி வழியாக வந்த தகவல் என்றும், இதை எல்லா உறுப்பினர்களுக்கும் பரப்ப வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. ‘இதை கேப்டன்தானே  சொல்லணும்” என்று சரியான பாயின்ட்டை பிடித்தார் வழக்கறிஞர் ஜனனி. என்ன இருந்தாலும் முன்னாள் தலைவர் அல்லவா?! அக்காவுக்கு அரசியல் ஞானம் கூடியிருக்கிறது.

சில தரக்குறைவான வார்த்தைகளை பொன்னம்பலம் சொன்னது குறித்து ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் வழக்கம் போல் தனியாலோசனையில் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தனர்.

மூச்சுக்கு முந்நூறு முறை ‘ஜெய்ஸ்ரீராம்’ என்று சொல்லிக் கொண்டிருந்த ஆசாமி, இன்னொரு புறம் உண்மையான வில்லனாக இருப்பார் போலிருக்கிறதே.

அணிகளைப் பிரிக்கும் வரை, வைஷ்ணவி, மமதி, டேனி ஆகியோர் சமையல் வேலையைப் பார்க்கலாம் என்கிற தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டது.

‘உணவுப் பொருட்களை அவர்களைக் கேட்காமல் எதையும் எடுக்க வேண்டாம்” என்கிற வேண்டுகோள் கட்டளையாக வைக்கப்பட்டது.

“எனக்கே உன்னை அத்தனை பிடிக்குதே.. என் தங்கச்சிக்கு பிடிக்காமலா போகும்” என்று பாலாஜியைக் கொஞ்சிக் கொண்டிருந்தார் சென்றாயன். “என்னடா ஒரு ஆர்ட்டிஸ்டை மதிக்க மாட்டேன்கிற?” என்ற பாலாஜியை ‘நீ ஆர்டிஸ்ட்லாம் இல்ல.

இங்க ஒரு போட்டியாளர்.. அவ்வளவுதான்” என்ற சென்றாயனின் கிண்டலை அருகிலிருந்த நித்யாவும் வரவேற்றார். ‘போய் குளிங்க தம்பி..’ என்ற சென்றாயனின் அதே வார்த்தைகளை நித்யாவும் சொன்னார்.

(ஒருபுறம் முறைத்து மறுபுறம் சிரிக்கும் பாலாஜி மற்றும் நித்யாவின் நடவடிக்கைகளை புரிந்து கொள்ளவே முடியவில்லை. லெப்ட் இண்டிகேட்டர் போட்டு ரைட்டில் கைகாட்டி நேராக சென்று குழப்புவதில் திறமைசாலிகளாக இருக்கிறார்கள்.)

தொடர்ந்து தொடரை வீடியோவில் பாருங்கள்

 

PART 1

PART 2

SOURCE 2

// ]]>

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.