ரயிலில் கழிவறை நீரைப் பயன்படுத்தி டீ மற்றும் காப்பி விற்பனை!! அதிர்ச்சியில் மக்கள்!!- வீடியோ

0
424

ரயிலில் விற்கப்படும் டீ மற்றும் காப்பிக்கும் கழிவறை நீரைப் பயன்படுத்தியதாக இணையதளத்தில் வீடியோ ஒன்று நேற்று வைரல் ஆனது. இதை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது முதல் முறை இல்லை என்றாலும் தற்போது அந்த விற்பனை ஒப்பந்ததாரர் மீது 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துத் தென் மத்திய ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்லும் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்ற வருடம் டிசம்பர் மாதம் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
railwaystea-1525326002

வீடியோவில் கழிவறையில் இருந்து டீ மற்றும் காபி கேனை எடுத்து வரும் விற்பனையாளர் பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணி தவறு நடைபெற்று இருப்பதாகக் கேள்வி கேட அந்த விற்பனையாளர் டதனை மறுக்கிறார்.

இது குறித்து ஐஆர்சிடிசி நிர்வாகம் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி விற்பனை ஒப்பந்ததாருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாகத் தென் மத்திய ரயில்வேஸின் முதன்மை பொது உறவுகள் அதிகாரி உமாஷங்கர் குமார் தெரிவித்துள்ளார்.

 

வீடியோவில் உள்ள இருவரும் அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்கள் என்றும் அவர்கள் இருவர் மட்டும் இல்லாமல் பலரை செகந்தராபாத் ரயில் நிலையத்தில் இருந்து நீக்கியதாகவும், இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காக ரயில்வே அதிகாரிகள் ஜாக்கிரதையாக இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.