அக்கறைப்பற்றில் இரு குழந்தைகளின் 21 வயதான தாய் நுன்கடன் தொல்லையால் தற்கொலை!!

0
401

நுன்கடன் தொல்லையால் இன்று காலை அக்கறைப்பற்று கோளாவில் 2 பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய 2 குழந்தைகளின் தாய் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்… இந்த இளம் தாயின் தற்கொலையுடன் சேர்த்து 123 ஆவது தற்கொலை நுன்கடனால் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களின் உயிரை நுண்கடன் நிதி நிறுவனங்கள் பலியாக்கி வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் இந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டு கடந்த ஐந்து மாத காலப் பகுதிக்குள் மாத்திரம் 53 தற்கொலை மரண சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

36223463_2062679810612600_8512346329920307200_n

இதில் 2016ம் ஆண்டு 97 தற்கொலை மரணங்கள் இடம் பெற்றுள்ளதுடன், 2017ம் ஆண்டு கடந்த வருடம் 116 தற்கொலை மரணங்கள் இடம் பெற்றுள்ளன. கடந்த இரண்டு வருடங்களையும் விட இந்த ஆண்டு ஐந்து மாதத்திலேயே 53 தற்கொலைகள் இடம் பெற்றுள்ளன.

இதேவேளை வடக்கு மாகாணத்தில் நுண் நிதிக்கடன் செயற்பாட்டினால் 59 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

36199839_2062679897279258_1971093782149464064_n36222752_2062680097279238_3267130443236900864_n

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.