சிறுமி கொலை சந்­தேக நபர் பொலி­ஸா­ரிடம் வாக்­கு­மூலம்

0
314

“புறா காட்­டு­வ­தாக சிறு­மியை அழைத்து சென்றேன். அப்­போது அவள் மயங்­கி­விட்டாள். அதன் பின்னர் கயிற்றால் கழுத்தை நெரித்தேன்” என யாழ்ப்­பாணம் சுழி­புரம் பகு­தியில் ஆறு வயது சிறு­மியை கொலை செய்­த­தாக சந்­தே­கிக்­கப்­படும் நபர் பொலி­ஸா­ருக்கு வழங்­கிய வாக்­கு­மூ­லத்தில் தெரி­வித்­துள்ளார்.

நேற்­று­முன்­தினம் யாழ்ப்­பாணம் சுழி­புரம் காட்­டுப்­புலம் பகு­தியை சேர்ந்த ஆறு வய­தான சிறு­மி­யொ­ருவர் கொலை செய்­யப்­பட்ட நிலையில் கிணற்­றுக்குள் இருந்து சட­ல­மாக மீட்­கப்­பட்­டி­ருந்தார்.

சடலம் மீட்­கப்­பட்டபோது கழுத்து பகுதி நெரிக்­கப்­பட்ட காயங்கள் காணப்­பட்­ட­துடன் கீழ் உள்­ளாடை மாத்­தி­ரமே காணப்­பட்­டி­ருந்­தது.

இச் சம்­பவம் தொடர்­பாக ஊர் மக்கள் வழங்­கிய தக­வல்­க­ளுக்கு அமைய வட்டுக்கோட்டை பொலி­ஸாரால் நான்கு பேர் ஆரம்­பத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்­க­ளிடம் மிகத் தீவி­ர­மான விசா­ர­ணை­க­ளா­னது முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது.

இவ்­வா­றான நிலையில் கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் ஒரு­வ­ரான அதே பகு­தியை சேர்ந்த 21வய­தான இளைஞன் தானே கொலை செய்­த­தாக ஒப்புக்கொண்டு அது தொடர்­பான தனது  வாக்­கு­மூ­லத்தை பொலி­ஸா­ருக்கு வழங்­கி­யுள்­ள­தா­கவும் அவ் வாக்கு­ மூ­லத்­தி­லேயே மேற்­படி தெரி­வித்­தி­ருந்­ததா­கவும் மூத்த பொலிஸ் உயர் அதிகாரி­யொ­ருவர் கேச­ரிக்கு தெரி­வித்­தி­ருந்தார்.

அப் பொலிஸ் உயர் அதி­காரி மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

குறித்த இளை­ஞ­னது தாய் சிறு­வ­ய­தி­லேயே விட்டுச் சென்ற நிலையில் தந்தையுடனேயே வளர்ந்­துள்ளார்.

இவ்­வா­றான இவரே இக் கொலையைச் செய்­துள்­ள­தாக ஒப்­புக்­கொண்­டுள்ளார்.

சம்­பவ தின­மான நேற்­று­முன்­தினம், அச் சிறுமி பாட­சாலை விட்டு வீடு சென்ற போது சிறு­மியை புறா காட்­டு­வ­தாக கூறி அழைத்து சென்­றுள்ளார்.

இதன்­போது அச் சிறுமி மயக்­க­ம­டைந்­துள்ளார். இதன் பின்னர் சிறு­மியின் தோட்டை எடுத்­து­விட்டு மாடு கட்­டு­வ­தற்கு பயன்­படும் கயிற்றால் சிறு­மியின் கழுத்தை நெரித்துள்ளார்.

இதன் பின்­ன­ரே குறித்த கிணற்­றுக்குள் சிறு­மியை தூக்கி வீசி­யுள்ளார். இக் குற்ற செயலை செய்­து­விட்டு குறித்த நபர் பிள்­ளையை காண­வில்லை என பெற்றோர் ஊர் மக்கள் தேடும் போது இவரும் சேர்ந்து தேடி­யுள்ளார்.

இந் நபர் அப் பிர­தே­சத்தில் சம்­பவம் இடம்­பெற்ற அன்று நண்­பகல் புறா இருக்­கின்­றதா என விசா­ரித்­துள்ளார்.

அப் பகு­திக்கு பெரிதும் வந்­தி­ராத அவர் அன்று மாத்­திரம் வந்­தி­ருந்­தது ஏன் என இச் சம்­பவம் இடம்­பெற்ற பின்னர் ஊர்­மக்கள் சிந்­தித்து பொலி­ஸா­ருக்கு தகவல் வழங்­கி­ய­மை­யா­லேயே இவர் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.

குறித்த நபர் வழங்­கிய வாக்கு மூலத்­திற்கு அமைய மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த அச் சிறு­மியின் பாட­சாலை சீருடை, புத்­தக பை போன்­றன மீட்­கப்­பட்­ட­துடன் அவற்றில் இரத்த கறைகள் காணப்பட்டமையும் அவதானிக்கப்பட்டிருந்ததாக அப் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை தொடர்ந்து குறித்த நபரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அம் மூத்த பொலிஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.