யாழில் பேருந்து உரிமையாளர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு

0
245

தீவகம் – வேலணை – அம்பிகை நகரில் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வேலணை 7 ஆம் வட்டாரத்தை சேர்ந்த தர்மலிங்கம் சஞ்சயன் (கணேசமூர்த்தி) என்பவரே இவ்வாறு இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.

தனியார் பேருந்து உரிமையாளரான இவர் சிறிதுகாலம் கடன்சுமை காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார் என்று தெரிவிக்கப்படுவதுடன் இவரது சடலம் ஒரு பற்றைக் காணிக்குள்ளிருந்து முழங்கால் நிலத்தில் தொடும் படியாக அரைகுறையாக தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மக்கள் தெரிவிப்பதுடன் குறித்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சங்கத்தானை பகுதியில் நான்கு பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை

15271-1-9cce1b8be1535466c1dffa6e55e84a8aயாழ்ப்பாணம் சங்கத்தானை சங்கம் வீதி பகுதியில் வசித்து வந்துவந்துள்ள நான்கு பிள்ளைகளின் தந்தையார் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

கொடிகாமம் பலநோக்குக் கூட்டுறவு சங்கத்தில் கடமையாற்றிவரும் 47 வயதுடைய சிவராசா சிவரூபன் என்ற குடும்பஸ்தரே இன்று அதிகாலை 1:30 மணியளவில் வீட்டில் பின் புறத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்

மரவன்புலவு பகுதியைச் சேர்ந்த இவர் தற்போது சங்கத்தானை பகுதியில் வசித்து வருகின்றார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.