பிக் பாஸ் வீட்டின் அம்மா – சின்னம்மா மும்தாஜ் – மமதி… தலைவி நித்யா..!: பிக்பாஸ் சீசன் 2 :8 எட்டாம் நாள்!!- ( வீடியோ)

0
502

கடந்த சீஸனில் இல்லாத அதிரடி மாற்றங்களை பிக்பாஸ் வீட்டில் இன்று காண முடிந்தது. சில நபர்களின் இரட்டை நிலைகளை நன்றாக அறிந்துகொள்ள முடிந்தது.

‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்கிற பிக்பாஸின் தாரக மந்திரத்தை  இன்னுமொரு முறை உணர முடிந்தது. விரிவாகப் பார்ப்போம்.

1_08178ஏழாம் நாளின் தொடர்ச்சி ஒளிபரப்பாகியது. கமல் தன்னிடம் ஆங்கிலத்தில் பேசியது பற்றி சென்றாயன் வியந்து கொண்டிருந்தார்.

“நான் பேசறது இங்லீஷ்னு அவர் கண்டுபிடிச்சிட்டார்ல’ என்று அவர் சொன்னது காமெடி.  கூட இருந்த வைஷ்ணவி, கமல் ஆங்கிலத்தில் சொன்னதை தமிழில் மொழிபெயர்த்து சொன்னார்.

பாலாஜியை வாக்குமூல அறைக்கு அழைத்தார் பிக்பாஸ். “எந்தவொரு நபர் இந்த வீட்டில் இல்லாமல் இருந்தால் இந்த வீ்ட்டின் சூழல் நன்றாக இருக்கும்?” என்றொரு அதிரடியான கேள்வியைக் கேட்டார். ‘நித்யா’ என்ற பதில் வரலாம் என்று பலர் எதிர்பார்த்திருக்கக்கூடும்.

ஆனால் ‘மமதி’ என்றார் பாலாஜி. ‘அவங்க மும்தாஜ் கூட க்ளோசா இருந்து நிறைய விஷயங்களை புறம் பேசறாங்கன்னு தோணுது. செயற்கையா இருக்காங்க”

இதே கேள்வியுடன் மற்ற உறுப்பினர்களும் தனித்தனியாக வாக்குமூல அறைக்கு அழைக்கப்பட்டனர். எதிர்பார்த்தபடி, மக்களின் வெறுப்பை சம்பாதித்து அதிக வாக்குகளைப் பெற்றவர், நித்யா. மூன்று வாக்குகள் மமதிக்கு கிடைத்தன. மும்தாஜ், அனந்த் வைத்தியநாதன், பொன்னம்பலம், சென்றாயன் ஆகியோருக்கு தலா ஒரு வாக்கு.

தொடர்ந்து வீடியோவில்.. பாருங்கள்

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.