அடுத்த முதல்வர் இவர்தான்! பிரபல ஜோதிடர் கணிப்பு!

0
280

அண்மையில் பிரபல ஜோதிட வல்லுனர் ஞானேஸ்வரர் ஆந்திராவில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியது, ‘என்னுடைய கணிப்பின் படி 2009-ம் ஆண்டு ஆந்திராவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது.

போலவே, நாடாளுமன்ற தேர்தலிலும், அமெரிக்க அதிபர் தேர்தலிலும் நான் கணித்தாவாறே மோடி, டொனால்ட் டிரம்ப் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

தற்போது மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

வருங்காலத்தில் பிரதமர் ஆகும் வாய்ப்பு, ஐஸ்வர்யாராய் மகள் ஆராத்யாவுக்கு உள்ளது.

ஆனால் இதற்கு ஆராத்யா தன்னுடைய பெயரை ரோகிணி என்று மாற்றிக் கொண்டால்தான் அது நடக்கும். 2024-ம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் நடக்கலாம்.

தெலுங்கில் பிரபல நடிகர் சிரஞ்சீவி, தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் அரசியலுக்கு வருவார்கள் என்று நான் முன்னரே கூறியிருந்தேன்.

சிரஞ்சீவி முதலில் அரசியலுக்கு வந்தார். தற்போது ரஜினியும் அரசியலுக்கு வந்துவிட்டார்.

தமிழ்நாட்டில் வரவிருக்கும் தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் தான் வெற்றி பெற்று முதல்வராவார். பிரபல ஜோதிடரின் இந்த ஆருடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.