திருமணத்திற்கு வந்த 6 வயது சிறுமியை ஐஸ் கிரீம் வாங்கி தருவதாக கூறி சீரழித்து கொன்ற கொடூரன்!!- (வீடியோ)

0
1249

திருமணத்திற்கு தனது பெற்றோருடன் வந்த 6 வயது சிறுமியை ஐஸ் கிரீம் வாங்கி தருவதாக ஒருவன் அழைத்து சென்று சிறுமியை சீரழித்து கொலை செய்துள்ள சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் நடைபெற்றது.

குவாலியர் பகுதியில் நடைபெற்ற திருமணத்திற்கு ஒரு தம்பதியினர் தங்களது 6 வயது மகளை அழைத்து சென்றுள்ளனர்.

பெற்றோர்கள் திருமண கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர். குழந்தை தண்ணீர் அருந்த செல்வதாக கூறி சென்றுள்ளது.

உரிய நேரத்தில் குழந்தை திரும்பவில்லை. எங்காவது விளையாடிக் கொண்டிரும் என நினைத்த பெற்றோர்கள் நீண்ட நேரம் ஆகியும் குழந்தையை காணவில்லை என்றதும் தேடிப்பார்த்து கிடைக்காததால் நள்ளிரவில் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் திருமண நிகழ்ச்சி நடந்த இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்துள்ளனர். அதில் இடம் பெற்ற காட்சிகளை கண்டு பெற்றோர் நிலைகுலைந்தனர்.

சுமார் இரவு 11.30 மணி அளவில் குற்றவாளி அந்த 6 சிறுமியை திருமணம் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திலிருந்து அழைத்து செல்கின்றார். நள்ளிரவு என்பதால் சாலையில் வெறிச்சோடி கிடக்கின்றது. யாரும் அங்கு இல்லை.

அந்த சிறுமியும் அவனுடன் செல்கின்றது. ஒரு கட்டத்தில் அந்த சிறுமி அவனிடமிருந்து தப்பித்து பின் நோக்கி தனியாக ஓடி வருகின்றது.

பின்னர் மீண்டும் குற்றவாளி அந்த சிரிமியை துரத்தி தன்னுடன் அழைத்து செல்கின்றான்.

சிறுது தூரம் வரை அந்த சிறுமியை அழைத்து செல்லும் குற்றவாளியும் அந்த சிறுமியை இருளில் மறைந்து விடுகின்றனர்.

பின்னர் மீண்டும் நள்ளிரவு 2.30 மணிக்கு அதே குற்றவாளி சிறுமி இல்லாமல் தணியாக வருவதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

மொப்ப நாய்களின் உதவியுடன் மறுநாள் காலை திருமண நிகழ்ச்சி நடந்த இடத்திலிருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் சிறுமியின் உடல் முகம் கற்கலால் சிதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக உடற்கூறு ஆய்வு சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்தியுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

குழந்தையை ஆசை வார்த்து கூறி அழைத்து சென்று சீரழித்து பின்னர் அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தை கற்கலால் குற்றவாளி சிதைத்துள்ளான்.

விசாரனையில் முதற்கட்டமாக சமையல்காரன் ஒருவனை போலிசார் கைது செய்துள்ளனர். அவனிடம் தொடர்ந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

குவாலியர் எஸ்பி குற்றவாளியை நெருங்கி விட்டதாக தெரிவித்துள்ளார். சிசிடிவி காட்சியின் உதவியுடன் போலிசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

”தயவு செய்து சட்டத்தை நிறைவேற்றி ஒருத்தனுக்காவது தண்டனய கொடுங்க இந்த மாறி செய்திகள் தான் அதிகம் வருகிறதே தவிர இதில் ஈடுபட்ட குற்றவாளிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது மரண தண்டனை வழங்கப்பட்டது என்ற செய்தி எப்போதுமே வருவதில்லையே ஏன்” என சமூக வலைதளத்தில் பலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.