பிரிந்து செயற்படுவோமாக இருந்தால் எமது மக்களை நாமே அழிப்பதாக அமையும்-‘நீதியரசர் பேசுகிறார்’மேடையில் சம்பந்தன் (படங்கள்)

0
566

நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு, கருத்து வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அதனை விடுத்து பிரிந்து செயற்படுவோமாக இருந்தால் எமது மக்களை நாமே அழிப்பதாக அமையுமென அவர் மேலும் குறிப்பிட்டார்.

வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எழுதிய ‘நீதியரசர் பேசுகிறார்’ என்ற தலைப்பிலான புத்தகம் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளை அழிக்க சர்வதேசம் உதவியதாகவும், அதற்காக தமிழ் மக்களுக்கு தீர்வுத் திட்டத்தை தருவோமென சர்வதேசத்திற்கு இலங்கை அரசாங்கம் வாக்குறுதி வழங்கியதாகவும் இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

எனினும், தீர்வுத் திட்டத்தில் இலங்கை அரசாங்கம் தற்போது பின்னிற்கின்றதென குற்றஞ்சாட்டினார்.

மேலும், விடுதலைப் புலிகளின் காலத்தில்கூட தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் பல முன்மொழிவுகளை முன்வைத்ததாகவும், அவற்றில் எதுவும் செயற்படுத்தப்படவில்லையென்றும் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் தார்மீக பொறுப்பு சர்வதேசத்திற்கு உண்டு என்றும் அதனை சர்வதேசம் உணர்ந்துகொள்ள வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

இதனை செயற்படுத்தாதவிடத்து, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட சர்வதேச சாசனத்தை உதாசீனப்படுத்துவதாகவே அமையும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை நாட்டை யார் ஆளவேண்டும் என்பதை தீர்மானிக்கும் வல்லமை தமிழ் மக்களுக்கு உண்டு என்பதை கடந்த 2015ஆம் ஆண்டு தேர்தல் நிரூபித்து விட்டதென சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் மக்கள் தங்களுக்கான தீர்வை அடையவேண்டுமாயின் ஒருமித்து செயற்படுவது அவசியமென வலியுறுத்தினார்.

இதேவேளை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனின் ‘நீதியரசர் பேசுகிறார்’ எனும் நூலை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் வெளியிட்டு வைத்துள்ளார்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நூல் வெளியிட்டு விழாவில், முதலமைச்சரிடமிருந்து கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் வெளியிட்டு வைக்க, முதலமைச்சரின் சகோதரி நூலை பெற்றுக் கொண்டார்.

இதன்போது, முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், சம்மந்தனுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவித்தார்.

இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் விக்கினேஸ்வரனால் எதிர்க்கட்சித் தலைவர் சம்மந்தன் உட்பட பிரதம விருந்தினர்களுக்கு சிறப்பு பிரதிகள், நினைவுப் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், வடமாகாண எதிர்கட்சி தலைவர் சி. தவராசா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், ஈ.சரவவணபவன், த. சித்தார்த்தன், யாழ். மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட், வடமாகாண அமைச்சர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், தமிழ் தேசிய முன்னணியின் செயலாளர் சிவராசா கஜேந்திரன், என். வித்தியாதரன் உள்ளிட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், சமய தலைவர்கள், அரசியல் ஆய்வாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டிருந்தனர்.

vik32Vikki-Book7Vikki-Book8Vikki-Book9Vikki-Book10Vikki-Book2Vikki-Book01Vikki-Book1Vikki-Book2Vikki-Book5Vikki-Book6Vikki-Book04

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.