பிக்பாஸ் 2 : நான் பேசுறது புரிஞ்சிச்சா உங்களுக்கு? – சென்றாயனைக் கலாய்த்த கமல்!

0
250

சென்னை: பிக்பாஸ் தொடர்பாக வெளியாகியுள்ள புதிய ப்ரோமோ வீடியோவில் கமல், காமெடி நடிகர் சென்றாயனைக் கலாய்ப்பது போன்ற காட்சிகள் உள்ளன. பிக்பாஸ் சீசன் 2வில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான போட்டியாளர்கள் ஆங்கிலத்தில் தான் பேசிக் கொள்கின்றனர்.

அந்த ஒரு சிலரில் காமெடி நடிகர் சென்றாயனும் ஒருவர். மற்றவர்களைவிட அவருக்கு ஆங்கில அறிவு குறைவு என்பதை அவர் வெளிப்படையாகவே ஒப்புக் கொள்கிறார். ஆனால், அவ்வப்போது கேமரா முன் சென்று தங்கிலீஷில் பேசுகிறார் சென்றாயன். இது காமெடியாகவே இருக்கிறது.

இந்நிலையில், இன்று ஒளிபரப்பாக உள்ள எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில், கமல் சென்றாயனிடம் ஆங்கிலத்தில் பேசுகிறார். ஆனால் அவர் என்ன பேசுகிறார் எனத் தெரியாமல் சென்றாயன் விழிக்கிறார்.

ஆங்கிலத்தில் பேசி முடித்த பின்னர், ‘நான் என்ன சொன்னேன்னு உங்களுக்கு புரிஞ்சதா? என கமல் கேட்கிறார். அதற்கு சென்றாயன் இல்லை என தலையசைக்கிறார். அதனைத் தொடர்ந்து, ‘நான் பேசுற இங்கிலீஷ் உங்களுக்குப் புரியலைண்ணா, நீங்க பேசுறது மக்களுக்கு எப்படி புரியும்?’ என கலாய்க்கிறார் கமல்.

இதைக் கேட்டு சென்றாயன் உட்பட அங்கிருக்கும் அத்தனை போட்டியாளர்களும் சிரிக்கின்றனர். இந்தக் காட்சிகளைப் பார்க்கும் போது, நிச்சயம் இன்றைய எபிசோட் ஜாலியாக இருக்கும் எனத் தோன்றுகிறது.

அதேபோல், தனது பிரபலமான மூடர்கூடம் பட வசனமான, ‘ஒரு வெள்ளைக்காரன்ட தமிழ்ல பேசக்கூடாதுனு தெரிஞ்ச உங்களுக்கு, ஒரு பச்சைத் தமிழன்கிட்ட ஏன் இங்கிலீஷ்ல பேசக்கூடாதுனு தெரியல’ என்பதை கமலிடன் சென்றாயன் திருப்பிக் கேட்பாரா என்பது இன்றைய நிகழ்ச்சியைப் பார்த்தால் தெரியும்

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.