காதலியை கொலை செய்து ”தாலி கட்டி… நெற்றி நிறைய குங்குமத்தை வைத்துவிட்டு..” தற்கொலை செய்த இளைஞன்!!

0
403

திருமணம் செய்துதர மறுத்ததால் இளம் பெண்ணையும் அவரது அம்மாவையும் கொலை செய்துவிட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், படவேடு கொண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன். லாரி டிரைவரான இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த சிவராமனின் மகள் நிர்மலாவைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

நிர்மலா, விடுதியில் தங்கி எம்.ஏ படித்து வந்திருக்கிறார். வார விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளார். இதைத் தெரிந்துகொண்டு அன்பழகன் நிர்மலாவின் வீட்டுக்குச் சென்று அவருடைய பெற்றோரிடம் பெண் கேட்டுள்ளார்.

ஆனால், நிர்மலாவின் பெற்றோர் படிப்பை முடிக்கட்டும் பிறகு பார்க்கலாம் என்று கூறியுள்ளனர். அதற்கு அன்பழகன், இதையேதான் பலமுறை சொல்லி தட்டிக் கழித்து வருகிறீர்கள். நிர்மலாவைத் திருமணம் செய்து கொடுங்கள்.

திருமணத்துக்குப் பிறகும் படிக்கட்டும். நான் படிக்க வைத்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார். ஆனால், நிர்மலாவின் பெற்றோரோ அன்பழகனை திட்டி அனுப்பியுள்ளனர்.

இதில் ஆத்திரமடைந்த அன்பழகன் குடித்துவிட்டு நேற்று இரவு 1.30 மணியளவில் நிர்மலாவின் வீட்டுக்குச் சென்று தூங்கிகொண்டிருந்த நிர்மலாவையும் அவரது அம்மா சாமுண்டீஸ்வரியையும் தலையணை வைத்து அமுக்கி கொலைசெய்துள்ளார்.

இறந்த நிர்மலாவின் கழுத்தில் தாலியைக் கட்டிவிட்டு நெற்றி நிறைய குங்குமத்தை வைத்துவிட்டு வெளியே வரும்போது நிர்மலாவின் தந்தை சிவராமனைக் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்ற அன்பழகன் வீட்டுக்குச் சென்று கயிற்றை எடுத்து தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து சந்தவாசல் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மாவட்ட எஸ்.பி. பொன்னி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

நிர்மலாவின் தந்தை சிவராமன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கண் விழித்த பின்பே வீட்டில் என்ன நடந்தது என்பது தெரியவரும் என்கிறது போலீஸ்.

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், “அன்பழகன் அந்தப் பெண்ணின் படிப்புக்கு எல்லா உதவியும் செய்தான். அவன்தான் படிக்கவே வைத்தான்.

கடந்த 6 வருஷமா அந்தப் பொண்ணுக்குத் தேவையான உதவி எல்லாத்தையும் செய்தான். ஆனா, அந்தப் பெண்ணு திருமணம் செய்து தருகிறேன் என்று சொல்லிட்டு திருமணம் செய்து கொடுக்காம படிப்ப காரணம் காட்டி தட்டிக் கழிச்சி வந்தாங்க.

அதனால அந்தப் பையன் ஒருமுறை விஷம் குடித்து தற்கொலை செய்துக்க பார்த்தான். ஆனா காப்பாத்திட்டாங்க. இந்தமுறை அந்தப் பொண்ணு வீட்டுக்குச் சென்று அந்தப் பொண்ணையும் அவங்க அம்மாவையும் கொலை பண்ணிட்டு அவனும் தற்கொலை செய்துகொண்டிருக்கிறான்” என்கின்றனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.