சண்டையிட்டுச் சென்ற வவுனியா இளைஞன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

0
228

வவுனியா – வேப்பங்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா வேப்பங்குளம் ஆறாம் ஒழுங்கையில் கிங்ஸ் விளையாட்டுக் கழகத்தின் மைதானத்திற்கு அருகிலுள்ள கிணற்றிலிருந்து குறித்த சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 22 வயதுடைய சத்தியசீலன் டிலக்சன் என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா பொலிஸார் கிணற்றிலிருந்து சடலத்தை எடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த இளைஞனின் பாதணிகள் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த இளைஞன் நேற்றைய தினம் வீட்டில் சண்டையிட்டு சென்றதாகவும், குடும்பத் தகராறு காரணமாகவே இவர் தற்கொலை செய்திருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.901625.0.560.320.160.600.053.800.700.160.902625.0.560.320.160.600.053.800.700.160.903

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.