வைரலாகும் விஸ்வரூபம் 2 மேக்கிங் வீடியோ

0
264

கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்தின் டிரைலர் இன்று வெளியாகவுள்ளது.

கமல்ஹாசன் கடந்த ஒரு வருடமாக பிக்பாஸ், என்னுள் மையம் கொண்ட புயல்,  அரசியல் எனத் தன்னை பெரும் பரப்புக்குள்ளேயே வைத்து வருகிறார்.

தனது  படைப்புகளால் எப்போதுமே திரைத்துறையில் சர்ச்சைக்கும் பரபரப்புக்கும் பேர் போன கமலுக்குக் கடந்த 2015ல் வெளிவந்த ‘தூங்காவனம்’ திரைப்படத்துக்குப் பின் எந்தப் படமும் வெளிவரவில்லை.

ஆனால், ‘தசாவதாரம்’ படத்தில் வந்த பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தை வைத்து ‘சபாஷ் நாயுடு’, 2013ல் பெரும் சர்ச்சைக்குப் பிறகு வெளிவந்து வெற்றி பெற்ற ‘விஸ்வரூபம்’ படத்தின் இரண்டாம் பாகம், ஷங்கருடன் இணைந்து ‘இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம்’ படம் குறித்த அறிவிப்புகள் வெளிவந்தன.

இதற்கிடையே, அரசியலில் புதிய கட்சி தொடக்கம், அதன் நிர்வாகப் பணி என பயணிக்கத் தொடங்கிய கமல், தற்போது மீண்டும் பிக் பாஸ் தொகுப்பாளர் பணிக்குத் திரும்பியுள்ளார்.

அதே சூட்டில் ‘விஸ்வரூபம் 2′ படத்தை ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டிருக்கிறார். அதன் முதல் கட்டமாக படத்தின்  டிரெயிலரை இன்று வெளியிடவுள்ளார்.

இந்த டிரெயிலரை தமிழில் ஸ்ருதி ஹாசன், தெலுங்கில் ஜுனியர் என்டிஆர், இந்தியில் அமீர்கான் ஆகியோர் வெளியிடவுள்ளனர். இந்நிலையில் ‘விஸ்வரூபம் 2′ படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்படும்போது எடுத்த மேக்கிங் வீடியோ ஒன்று 2014-ம் ஆண்டு வெளியிடப்படது.

அது தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது இயக்குநர், நடிகர் கமலின் அசாத்திய ஸ்டன்ட் காட்சிகள் உருவான விதம் ரசிகர்களுக்குப் பெரும் எதிர்பார்ப்பைத் துண்டும் வகையில் உள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.