அழுது புரண்ட பொடியனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ- வீடியோ

0
297

அழுது புரண்ட சிறுவனுக்காக பஸ்சை விட்டு இறங்கிய ரொனால்டோ, அவனுடன் போட்டோ எடுத்து இன்ப அதிர்ச்சி அளித்தார்

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. ரஷியா உலகக் கோப்பையில் போர்ச்சுக்கல் தனது முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை எதிர்கொண்டது.

இந்த ஆட்டம் 3-3 என டிராவில் முடிந்தது. போர்ச்சுக்கல் அணிக்காக அடித்த மூன்று கோலும் கிறிஸ்டியானோ ரொனால்டோவை சார்ந்தது. தனது கால்பந்து வரலாற்றில் இதன்மூலம் 51-வது ஹாட்ரிக்கை பதிவு செய்தார்.

கடந்த வாரத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது அணி வீரர்களுடன் பஸ் மூலம் விமான நிலையத்திற்கு செல்ல முயன்றார்.

அப்போது அவர் பஸ்ஸிற்குள் ஏறிவிட்டார். அப்போது பஸ் அருகில் நின்ற கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிர ரசிகனான சிறுவன் ஒருவன், ரொனால்டோ அருகில் இருந்து போட்டோ எடுக்க முடியவில்லையே என்ற கவலையில் அணிந்து கொண்டு அழுது கொண்டிருந்தார். அவன்  ரொனால்டேவின் 7 நம்பர் ஜெர்சி அணிந்திருந்தார்.

அப்போது பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அந்தச் சிறுவனை பிடித்து பஸ் அருகே செல்ல முடியாத வகையில் பார்த்துக் கொண்டார்.

இதை பஸ்ஸில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ரொனால்டோ, உடனடியாக பஸ்ஸில் இருந்து கீழே இறங்கினார்.

அந்த சிறுவனை அழைத்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார் தன்னுடன் அனைத்துக் கொண்டார். அத்துடன் அந்த சிறுவனும் ரொனால்டோவை கட்டிப்பிடித்தான்.

இதை சற்றும் எதிபார்க்காத அந்த சிறுவனின் தாய், ரொனால்டோவின் அனுமதி பெற்று பொறுமையாக போட்டோ எடுத்துக் கொண்டார். சிறுவன் அணிந்த ஜெர்சியில் ரொனால்டோ தனது ஆட்டோகிராஃபை பதிவு செய்தார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.