பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் ஓவியா?’ – விஜய் டிவி வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் குஷி..

0
1135

நடிகை ஓவியா மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளார். அதனை உறுதிப்படுத்தி விஜய் தொலைக்காட்சி ட்வீட் போட்டுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே பிக் பாஸ் சீசன் 2 இன்று முதல் ஆரம்பம் ஆகிறது. இதில் யார் கலந்துகொள்ளப் போகிறார்கள் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் பிக் பாஸ் ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.

இதுவரை பவர் ஸ்டார் சீனிவாசன், தாடி பாலாஜி, அவரது மனைவி கலந்துகொள்ளப்போவதாக உறுதியான தகவல் வெளிவந்தாலும், அவர்களைத் தவிர நடிகர் பரத் மற்றும் வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள் என தகவல் பரவி வருகிறது.

இதுஒருபுறம் இருக்க, நிகழ்ச்சியை புரோமோட் செய்யும் வேலைகளில் விஜய் தொலைக்காட்சி ஆர்வம் காட்டிவருகிறது. அந்தவகையில் தினமும் பிக் பாஸ் 2 குறித்த செய்திகள், புகைப்படங்கள் வெளிவந்த வண்ணம் இருந்து.

நேற்று பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் நடிகர் கமல்ஹாசனுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுப்பது போன்ற வீடியோ அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இது வைராலகி வருகிறது.

இதற்கிடையே நடிகை ஓவியா மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக விஜய் டிவி வீடியோ வெளியிட்டுள்ளது.

நடிகை ஓவியா மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளார். அதனை உறுதிப்படுத்தி விஜய் தொலைக்காட்சி ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளது.

அதில், நடிகர் கமல்ஹாசன் 17வது ஆள் வரவிருக்கிறார் என நடிகை ஓவியாவை வரவேற்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கடந்த சீசனில் தனது நடவடிக்கையால் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர் ஓவியா.

இதனால் இவருக்கு என ஓவியா ஆர்மி உருவானது. இந்த ஓவியா ஆர்மி கடந்த ஆண்டு இணையத்தைக் கலக்கிய நிலையில் மீண்டும் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

இது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மீண்டும் ஓவியா ஆர்மி இணையத்தைக் கலக்கும் என உறுதியாகக் கூறலாம்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.