கஞ்சா, போதைப்பொருட்கள் கடத்துபவர்களுக்கு, மறைமுக உதவி “லைக்கா” மொபைல், சுவிஸ் செய்தி நிறுவனம் தகவல்.. (வீடியோ)

0
483

லைக்க மொபைல் தொலைபேசி அட்டைகளின் விற்பனை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

லைக்க மொபைல் நிறுவனமும், அந் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களும் தொலைபேசி அட்டைகளை விற்பனை செய்யும்போது சரியான முறையில் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விபரங்களை சரியான முறையில் பரீசீலனை செய்து பதிவுகளை மேற்கொள்ளவில்லை. இதனால் குற்றங்கள் செய்வதற்கு சந்தர்ப்பம் அளிக்கின்றது என்பதே மிகப் பிரதானமான காரணமாகும்.

செங்காளான் மாநிலத்தின் குற்றவியலுக்குப் பொறுப்பான அலுவலகம் கருத்துத் தெரிவிக்கையில்

கஞ்சா போன்ற போதைப்பொருட்களை பாவிப்போர் அதிகமானோர் Lycamobile தொலைபேசிகளையே பயன்படுத்துகிறார்கள் என்றும், இவர்கள் தொலைபேசி அட்டைகளை வாங்கும்போது லைக்க மொபைல் நிறுவனம் அவர்களுடைய பெயர், முதற்பெயர், பிறந்ததிகதி, முகவரி போன்றவற்றைச் சரியான முறையில் பரிசலீக்காது வழங்கியதால் இவர்களை அடையாளம் காணமுடியாமல் உள்ளது.

அத்துடன் லண்டன் பிரான்ஸ் போன்ற நாடுகளில் சட்டத்திற்கு முரணான வகையில் சேகரிக்கப் பட்ட பணமே இன்று லண்டனில் உள்ள சொத்துக்கள் என தகவல் வெளியிட்டுள்ள சுவிஸ் ஊடகம் லைக்க மொபைல் நிறுவனத்தை சுமார் ஓர் ஆண்டுகளிற்கு மேலாக கண்காணித்து வந்ததன் அடிப்படையில் பல வெளியிட முடியாத ஆதாரங்கள் சுவிற்சலாந்து விசேட பொலிஸாரிற்கு கிடைத்துள்ளதுடன், சுவிற்சலாந்து அரச சட்டவாளர்களும் மிக ஆழமாக இவ் விடயத்தை ஆய்வு செய்வதுடன் முதல் கட்டமாக இவ் அமைப்பின் சிம் அட்டைகளை பயன்படுத்துவோரை தீவிர கண்காகிப்பிற்குள் ஈடுபடுத்தியுள்ளதுடன் பதிவு செய்யாத சிம் அட்டைகளை பயன் படுத்துவோர் தொடர்பில் சட்டங்கள் இறுக்கமடையலாம் என மேலும் சுவிற்சலாந்து ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

போதைப்பொருட்களை பாவிக்கும் 26 பேர் 68 தொலைபேசி அட்டைகளை வைத்திருக்கிறார்கள் ஆனால் அதில் 65 தொலைபேசி அட்டைகளுக்கு எந்தவிதமான பதிவுகளும் இருக்கவில், சில சந்தர்பங்களில் காவற்துறையினரால் இவர்களின் தனிப்பட்டவிபரங்கள் பரீசிலிக்கப்படும் போது அது தவறானதாகவே காணப்படுகின்றது.

பொதுவான நோக்கில் பார்க்கும் போது நிறுவனம் ஓர் நல்ல நிறுவனமாகத் தென்படவில்லை.

செய்காளன் மாநிலமும், சூரிச் மாநிலமும் இது தொடர்பான குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வருகின்றார்கள்.

ஏனெனில் போதைப்பொருட்களை பயன்படுத்தும் நபர்களுக்கு இவ் நிறுவனம் எதிர்காலத்தில் சார்பாக இருக்கக்கூடாது என்றும், எதிர்காலத்தில் சரியான முறையில் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விபரங்களை பரீசீலனை செய்து, தவறுகளை விடாது சரியான முறையில் செயற்பட வேண்டும் என்பதற்காக.

பிரித்தானியாவிலும் நிறுவனமும் இத்தொலைபேசி அட்டைகளின் விற்பனை மூலம் அதிகளவான பணத்தை சட்டரிதியற்ற முறையில் பல்வேறு முறைகளின் மூலம் சம்பாதித்துள்ளது எனவும் சுவிஸ் செய்தி நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது..

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.