காதலனுக்கு 54 , காதலிக்கு 28 : மனைவி எதிர்த்ததால் காதலியுடன் தற்கொலை செய்துகொண்ட நபர்

0
643

தமது காதலுக்கு தமது குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடியொன்று ரயிலில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பமொன்று காலி ஹபராதுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அகங்கம பகுதியை சேர்ந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரும் , ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயொருவருமே இவ்வாறாக தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.

உயிரிழந்த 54 வயதுடைய நபர் முச்சக்கர வண்டி சாரதி என்பதுடன் அவரின் பிள்ளைகளும் திருமணம் முடித்துள்ளனர்.

அத்துடன் உயிரிழந்த 28 வயதுடைய பெண் இதற்கு முன்னர் இரண்டு பேருடன் ஒன்றாக வாழ்ந்துள்ளதுடன் பின்னர் குறித்த 54 வயதுடைய நபருடன் காதல் கொண்டுள்ளார்.

இதற்கு அந்த நபரின் மனைவி எதிர்ப்பு தெரிவித்த நிலையிலேயே இவர்கள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக நம்பப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக ஹபராதுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.