இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும்?

0
1263

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (ஜூன் 15 – ஜூன் 21) பலன்களைத் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து படியனடையவும்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு இது உகந்த நேரம். பணம் பல வகையிலும் உங்களை நாடி வரும்.

புதிய திட்டங்கள் தீட்டி வெற்றி பெறுவீர்கள். உற்றார் உறவினர்கள், நண்பர்களுக்கு உதவி செய்து அவர்களை மகிழ்விப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் ஊதிய உயர்வுகளைப் பெறுவர். திட்டமிட்ட வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வியாபாரிகளுக்கு வருமானம் சீராக இருக்கும்.

மறைமுக போட்டிகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். விவசாயிகள் கடுமையாக உழைத்து வருவாய் ஈட்டுவீர்கள். முக்கிய பிரச்னைகளையும் சமாளித்து விடுவீர்கள்.

அரசியல்வாதிகள் செய்யும் செயல்களில் வெற்றி பெறுவார்கள். பெயரும் புகழும் வளரும். கலைத்துறையினர் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணவரவு சுமாராக இருக்கும்.

பெண்மணிகளுக்கு கணவருடன் நல்லுறவு நிலவும். உறவினர்களால் சிறு தொல்லைகள் ஏற்படும். மாணவமணிகள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபட்டு வெற்றிக்கொடி நாட்டுவீர்கள்.

பரிகாரம்: புதன்கிழமைகளில் பெருமாளை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 15, 16. 

சந்திராஷ்டமம்: இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும் குதூகலமான தருணமிது. குடும்பத்தில் குழப்பங்கள்

அகலும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். உடன்பிறந்தோர் வழியில் சுமுகமான சூழல் உண்டாகும். பழைய கடன்களை அடைத்து விடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் யாவும் நிறைவேறும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் வேலைப்பளு குறையும்.

வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சீராக இருக்கும். ஆகவே வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் பயன்படுத்துவீர்கள்.

விவசாயிகளுக்கு கொள்முதலில் அதிக லாபம் கிடைக்கும். கால்நடைகளை வைத்திருப்போர் நல்ல வருமானம் பெறுவர்.

அரசியல்வாதிகள் நற்பெயர் வாங்குவீர்கள். மாற்றுக்கட்சியைச் சார்ந்தவர்கள் நட்பு பாராட்டுவர். கலைத்துறையினர் புதிய வளர்ச்சியைக் காண்பார்கள். எடுத்த செயல்கள் வெற்றி பெறும்.

பெண்மணிகளின் உடல்நலம் பாதிக்கும். கணவரிடம் சுமாரான ஒற்றுமையே நிலவும். மாணவமணிகள் படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள். விளையாட்டிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவார்கள்.

பரிகாரம்: விநாயகரையும் துர்க்கையையும் வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 16, 17. 

சந்திராஷ்டமம்: இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

உங்கள் அறிவும் ஆற்றலும் பளிச்சிடும் நேரமிது. தேவையில்லாத சில அலைச்சல்கள் உண்டானாலும் முடிவு சாதகமாகவே அமையும். குடும்பத்தில் பற்றும் பாசமும் அதிகரிக்கும்.

கவலைகள் யாவும் படிப்படியாகக் குறையும். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக இருந்துவந்த தடங்கல்கள் நீங்கும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் ஒற்றுமையுடன் பழகவும். மேலதிகாரிகளால் சிறு உபத்திரவங்கள் இருந்தாலும் அதனால் பாதிப்பில்லை.

வியாபாரிகளைத் தேடி வரவேண்டிய பணம் வரும். மன உறுதியுடன் செயல்பட்டு வருமானத்தை மேலும் பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் பெருகி, லாபம் உண்டாகும். குத்தகைகளால் நல்ல வருமானம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் பேச்சில் கட்டுப்பாட்டை மேற்கொள்ளவும். குறிப்பாக, மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது கவனம் தேவை.

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வதில் சில தடைகள் ஏற்பட வாய்ப்புண்டு. பெண்மணிகள் குடும்பத்தினரிடம் அக்கறையாக இருக்கவும். மாணவமணிகளுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும்.

பரிகாரம்: திருவேங்கடநாதனை தரிசிக்கவும். நவக்கிரகத்தை பிரதட்சிணம் செய்யவும்.

அனுகூலமான தினங்கள்: 15, 17. 

சந்திராஷ்டமம்: இல்லை.

கடகம்  (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். தந்தை வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகளைப் பெறுவீர்கள். உடன்பிறந்தோர் அன்புக்கரம் நீட்டுவர். கவலைகள் படிப்படியாக அகலும். எதையும் சாதிக்க துடிக்கும் வலிமையை பெறுவீர்கள். உடல் நலம் சற்று பாதிக்கப்படலாம்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் கவனம் செலுத்தவும். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரிகள் வருமானத்தைத் தேடிச் செல்வார்கள்.

இருப்பினும் புதிய முதலீடுகளில் ஈடுபடவேண்டாம். விவசாயிகளுக்கு கொள்முதலில் நல்ல லாபம் கிடைக்கும். நீர்வரத்து அதிகமாக இருப்பதால் விளைச்சல் நன்றாகவே காணப்படும்.

அரசியல்வாதிகள் மக்கள் நலப்பணிகளில் கவனத்துடன் செயல்படுவீர்கள். உங்கள் செல்வாக்கும் அதிகரிக்கும்.

கலைத்துறையினரின் ஆற்றல் கூடும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். விமர்சனங்களை புரிந்துக்கொள்வது நல்லது. பெண்மணிகளுக்கு பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்லவும். . மாணவ
மணிகள் கல்வியில் மேம்பட சீரிய முயற்சிகள் எடுக்கவும்.

பரிகாரம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்ய செல்வ வளம் கூடும். 

அனுகூலமான தினங்கள்: 18, 19.

சந்திராஷ்டமம்: இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

உங்கள் முயற்சிகள் சற்று தாமதமானாலும் வெற்றி பெறும். அறிவாற்றல் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திட்டமிட்ட வேலைகள் யாவும் வெற்றி பெறும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் செலுத்தவும்.

உத்தியோகஸ்தர்கள் தடைப்பட்டிருந்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிவாகை சூடுவீர்கள். பதவி உயர்வு பெறுவதற்கான அறிகுறிகளும் தோன்றும். வியாபாரிகளுக்கு பணவரவு சீராக இருக்கும்.

தேவைக்கேற்ற சரக்குகளை வாங்கி விற்பனை செய்வீர்கள். விவசாயிகள் இந்த வாரம் புதிய குத்தகைகளை எடுக்க வேண்டாம். வாய்க்கால் வரப்புப் பிரச்னைகளில் கவனமாக இருக்கவும்.

அரசியல்வாதிகளுக்கு எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். அரசு அதிகாரிகளும் அனுசரணையாக இருப்பார்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் செய்து கொண்டு வெற்றிப் பாதையை நோக்கி நடப்பார்கள்.

பெண்மணிகளுக்கு பணவரவில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். மாணவமணிகள் படிப்பில் அக்கறை செலுத்துவார்கள். விடியற்காலையில் படிப்பதால் ஞாபக சக்தி கூடும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை தரிசனம் செய்யவும். சனிபகவானுக்கு விளக்கேற்றி வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 16, 18. 

சந்திராஷ்டமம்: இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

திட்டமிட்ட காரியங்களில் படிப்படியான வெற்றிகளை அடைவீர்கள். சுபச்செலவுகளைச் செய்து மகிழ்வீர்கள். வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் முடிவுகளை அனைவரும் ஏற்றுக்கொள்வர்.

உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றமும் பதவி உயர்வும் பெறுவார்கள், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். வியாபாரிகள் போட்டிகளைச் சமாளித்து சந்தைகளில் பொருள்களை விற்பனை செய்வர்.

கூட்டாளிகளை அரவணைத்துச் செல்லவும். விவசாயிகள் வெகுகாலமாகச் செய்ய நினைத்திருந்த வேலைகளைச் செய்து முடிப்பர். பழைய குத்தகைகளைத் திருப்பிச் செலுத்துவர்.

அரசியல்வாதிகள் உட்கட்சிப் பூசலினால் கவலை அடைவீர்கள். தொண்டர்களை சாந்தப் படுத்துவீர்கள்.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களில் நல்ல வருமானம் கிடைக்கும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சொல்லிக் கொள்ளும் படியாக இருக்காது. மாணவமணிகள் அதிக மதிப்பெண்கள் பெற சீரிய முயற்சி செய்து படிக்கவும்.

பரிகாரம்: சனிபகவானை வழிபடவும். ஏழைகளுக்கு உதவி செய்யவும். 

அனுகூலமான தினங்கள்: 17, 19. 

சந்திராஷ்டமம்: இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

உங்களது எல்லா செயல்களும் நேர்த்தியாக முடியும். பொருளாதாரம் நன்றாக இருக்கும்.

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். எதிர்பார்த்த உதவிகளைப் பெறுவீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் வரும். அனைவரையும் அனுசரித்துச் செல்லவும்.

உத்தியோகஸ்தர்கள் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். எதிர்பாராத பதவி உயர்வு தேடிவரும். அலுவலக ரீதியான பயணங்களைச் செய்து பயனடைவீர்கள்.

வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் திருப்திகரமாக முடியும். புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் அதிகரிக்கும். புதிய குத்தகைகள் உங்களை நாடி வரும்.

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். சமுதாயப் பணி செய்து அதில் நிம்மதி அடைவீர்கள். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த மதிப்பும் அங்கீகாரமும் பெறுவார்கள்.

புதிய ஒப்பந்தங்கள் உங்களைத் தேடிவரும். பெண்மணிகளுக்கு பொருளாதாரத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை தென்படும். மாணவமணிகள் கல்வியில் முன்னேற மேற்கொள்ளும் பயிற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

பரிகாரம்: விநாயகரை வழிபட்டு வர, சங்கடங்கள் தீரும். 

அனுகூலமான தினங்கள்: 17, 20.

சந்திராஷ்டமம்: இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

கவலைகள் மறந்து செயலாற்றுவீர்கள். குடும்பத்திற்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பீர்கள். சிலர் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் பதவி உயர்வு கிடைக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். வியாபாரிகளைத் தேடி வரவேண்டிய பணம் வந்து சேரும்.

வரவு செலவு விஷயங்களில் அக்கறை காட்டவும். விவசாயிகளுக்கு தோட்டம், தோப்பு உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் நன்றாக முடியும். விளைபொருள்கள் விற்பனையில் லாபம் தென்படும்.

அரசியல்வாதிகள் எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பார்கள். கட்சி மேலிடத்தில் நற்பெயர் எடுப்பீர்கள்.

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் பெறுவர். ரசிகர்களின் ஆதரவு குறைந்து காண்பபடும். பெண்மணிகள் குடும்பத்தில் வீண் குழப்பங்களைச் சந்திக்க நேரிடும். மாணவமணிகள் பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து மனப்பாடம் செய்யவும்.

பரிகாரம்: வியாழனன்று குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 16, 19.

சந்திராஷ்டமம்: 15.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

சந்தோஷமளிக்கும் செய்திகள் தேடி வரும். நம்பிக்கையுடன் ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தாருடன் சுற்றுலா சென்று வருவீர்கள். உடலிலும் மனதிலும் இருந்த சோர்வுகள் அகன்று உற்சாகம் உண்டாகும். திட்டமிட்ட வேலைகளில் வெற்றிகளைக் காண்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் சுமுகமாக முடியும். விரும்பிய இடமாற்றமும் கிடைக்க வாய்ப்புண்டாகும். வியாபாரிகள் புதுப்புது யுக்திகளைக் கையாண்டு வியாபாரத்தைப் பெருக்குவார்கள்.

புதிய முதலீடுகளிலும் தைரியமாக ஈடுபடலாம். விவசாயிகளுக்கு திட்டமிட்ட காரியங்களில் தடையுடன் கூடிய வெற்றி கிடைக்கும். புழுபூச்சி பாதிப்புகள் காணப்படும்.

அரசியல்வாதிகளின் செயல்கள் சாதனைகளாக மாறும். கட்சி மேலிடத்தின் பாராட்டு கிடைக்கும். கலைத்துறையினர் பல தடைகளைத் தாண்டி புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள்.

ஆனாலும் வருமானம் குறைந்தே காணப்படும். பெண்மணிகள் பொருளாதாரத்தில் அபிவிருத்தியைக் காண்பர். மாணவமணிகள் கடுமையாக உழைத்தால் அதற்கேற்ற பலனை அடையலாம்.

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் பைரவரை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 18, 19. 

சந்திராஷ்டமம்: 16,17.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

அனைத்து காரியங்களிலும் வெற்றி கிட்டும். வேலைகள் குறையும். தைரியத்துடன் பல சாகசங்களைச் செய்வீர்கள்.

வரவுக்குத் தகுந்த செலவுகள் ஏற்படும். உடல்நலத்தில் கவனம் தேவைப்படும். நண்பர்களுக்கு உதவ நினைத்து அதனால் வருத்தப்பட நேரிடும்.

உத்தியோகஸ்தகர்கள் இடைவிடாமல் உழைக்க வேண்டி வரும். கோரிக்கைகள் நிறைவேறத் தாமதமாகும்.

வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடியும். கையில் சரளமாகப் பணம் புரளும். விவசாயிகளுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். சரியான முறையில் பாசன வசதிகளைப் பன்படுத்தி உற்பத்தியைப் பெருக்குவீர்கள்.

அரசியல்வாதிகள் பேசும் நேரத்தில் கவனமாக இருக்கவும். ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செயல்படவும். கலைத்துறையினர் உழைப்பிற்குத் தகுந்த பாராட்டுகளைப் பெறுவார்கள்.

பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். வீண்பேச்சுகளைத் தவிர்க்கவும். மாணவமணிகள் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களால் நன்மையடைவார்கள்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் பெருமாளையும் தாயாரையும் வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 17, 21.

சந்திராஷ்டமம்: 18,19.

கும்பம்  (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

உங்கள் அனைத்து செயல்களும் உரிய இலக்கினை நோக்கிச் செல்லும். பொருளாதாரத்தில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். உற்றார் உறவினர்களிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவுகளும் கிடைக்கும். செயல்களில் சிரித்த முகத்துடனும் நற்சொற்களுடனும் பேசி வெற்றி அடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் கடினமாக உழைத்தாலும் மேலதிகாரிகளின் பார்வை அவர்கள் மீது விழ சாத்தியமில்லை.

அதனால் அவர்களின் நல்லெண்ணங்களைப் பெற முயற்சிக்கவும். வியாபாரிகளுக்கு தேவையான பணப்புழக்கம் இருக்கும்.

புதிய முதலீடுகளில் ஈடுபடுவது அவ்வளவு உசிதமல்ல. விவசாயிகளுக்கு தோட்டம் தோப்பு உள்ளிட்ட பணிகள் நன்றாக முடியும். விளைபொருள்களின் விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகளைத் தேடி புதிய பொறுப்புகள் வரும். மேலிடத்தின் பார்வை உங்கள் மீது விழுவதால் எதையும் ஓர் உத்வேகத்துடன் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினர் வரும் இடையூறுகளை வெற்றிகரமாக எதிர்கொள்வார்கள். பெண்மணிகள் ஆடம்பரப் பொருள்களை வாங்குவர். மாணவமணிகள் எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளலாம்.

பரிகாரம்: “ராம்.. ராம்’ என்று ஜபித்தபடியே ராமபக்த அனுமனை சுற்றி வரவும். 

அனுகூலமான தினங்கள்: 20, 21. 

சந்திராஷ்டமம்: 20,21.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

கவலைகள் குறைந்து மகிழ்ச்சி காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் சீரான நிலைமை தென்படும். எண்ணங்கள் யாவும் நிறைவேறும். இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடத்த இது உகந்த நேரமாகும். உடன்பிறந்தோர் வழியில் நிலவிய மனக்கசப்புகள் நீங்கி அன்பு மேலோங்கும்.

உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளைச் செவ்வனே செய்து முடிப்பார்கள். மனதில் நிம்மதி ஏற்படும். மேலதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை செலுத்துவர்.

வியாபாரிகள் குறைந்த முதலீட்டில் வியாபாரத்தை விரிவுப் படுத்தலாம். கூட்டாளிகளைக் கலந்தாலோசித்து செயல்படவும். விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி நன்றாக இருக்கும். புதிய குத்தகைகள் மூலம் லாபம் சம்பாதிப்பீர்கள்.

அரசியல்வாதிகளின் முயற்சி வெற்றி பெறாது. கவனமாக இல்லாவிட்டால் எதிர்கட்சிக்காரர்களின் தொல்லைகளைச் சந்திக்க நேரிடும்.

கலைத்துறையினர் புதிய வாய்ப்புகள் பெறுவார்கள். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பார்கள். மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். விடாமுயற்சிகள் எதிர்பார்த்த பலனைத் தரும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமையில் முருகப்பெருமானை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 16, 21. 

சந்திராஷ்டமம்: இல்லை.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.