அச்­சு­றுத்­தலை எதிர்­கொள்ள தமி­ழர்கள் தயாரா?- சத்திரியன் (கட்டுரை)

0
468

வடக்கு மாகா­ண­சபை உறுப்­பினர் து.ரவி­க­ரனின் தகவல் படி, போர் முடி­வுக்கு வந்த பின்னர், வடக்கில் புதி­தாக அல்­லது வழி­பாட்டு இடங்கள் கட்­டப்­பட்­டி­ருக்­கின்­றன.

இவற்றில் முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் அதி­க­பட்­ச­மாக, 67 விகா­ரைகள் கட்டப்பட்டிருக்­கின்­றன. வவு­னி­யாவில் 35, மன்­னாரில் 20, யாழ்ப்­பா­ணத்தில் 6, கிளிநொச்­சியில் 3 என்று புதிய விகா­ரைகள் அமைக்­கப்­பட்­டுள்­ளன

திட்­ட­மிட்ட குடி­யேற்­றங்கள் வடக்கின் மிக முக்­கி­ய­மான பிரச்­சி­னை­யாக மாறியிருக்கின்­றன.

முல்­லைத்­தீவு, வவு­னியா, மன்னார் மாவட்­டங்­களில் தொடங்­கிய இந்தப் புற்­றுநோய் இப்­போது யாழ்ப்­பா­ணத்­தையும் விட்டு வைக்­க­வில்லை.

வட­ம­ராட்சி கிழக்கில் திடீ­ரென கட­லட்டை பிடிக்கும் போர்­வையில், வெளி­மா­வட்ட மீன­வர்­களின் அத்­து­மீ­றல்கள் ஆரம்­பித்­தி­ருக்­கின்­றன. இதனால் அங்­குள்ள மீன­வர்கள் குழப்­ப ­ம­டைந்­தி­ருக்­கி­றார்கள்.

இன்­னொரு புறத்தில், முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் சிங்­களக் குடி­யேற்­றங்கள் தீவி­ர­ம­டைந்து வரு­கின்­றன.

625.500.560.350.160.300.053.800.900.160.90து.ரவி­க­ரன்

வடக்கு மாகா­ண­சபை உறுப்­பினர் து.ரவி­க­ரனின் தகவல் படி, போர் முடி­வுக்கு வந்த பின்னர், வடக்கில் புதி­தாக 131 பௌத்த விகா­ரைகள் அல்­லது வழி­பாட்டு இடங்கள் கட்­டப்­பட்­டி­ருக்­கின்­றன.

இவற்றில் முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் அதி­க­பட்­ச­மாக, 67 விகா­ரைகள் கட்­டப்­பட்­டி­ருக்­கின்­றன. வவு­னி­யாவில் 35, மன்­னாரில் 20, யாழ்ப்­பா­ணத்தில் 6, கிளி­நொச்­சியில் 3 என்று புதிய விகா­ரைகள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

இவ்­வாறு புதி­தாக முளைத்த விகா­ரை­களில் பெரும்­பா­லா­னவை, பௌத்த மதத்தைப் பின்­பற்­றாத மக்கள் அதிகம் வாழு­கின்ற பகு­தி­க­ளி­லேயே அமைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

பௌத்த மதத்தைப் பின்­பற்­றாத மக்கள் வாழு­கின்ற பகு­தி­களில் பௌத்த விகா­ரைகள் கட்­டப்­படும் பின்­ன­ணியை இரண்டு வித­மாக நோக்­கலாம்.

ஒன்று, வடக்கும் பௌத்த பூமி தான், அது தமி­ழரின் தாயகம் அல்ல என்­பதை வரலாற்று ரீதி­யாக நிலைப்­ப­டுத்­து­வது.

இரண்­டா­வது, பௌத்த விகா­ரை­களை அமைத்து வழி­பா­டு­களை நடத்த ஆரம்­பிக்கும் போது, அங்கு யாத்­திரை வரத் தொடங்கும் சிங்­க­ள­வர்கள், காலப்­போக்கில் வியா­பாரம் என்று வரு­வார்கள். பின்னர் அங்­கேயோ அல்­லது அரு­கிலோ தங்­கி­வி­டு­வார்கள்.

இதன் மூலம், ஒரு கட்­ட­மைக்­கப்­பட்ட ஆனால் மிக­சூட்­சு­ம­மான சிங்­களக் குடியேற்றங்களை ஊக்­கு­விக்க முடியும். வடக்கு, கிழக்கில் திட்­ட­மிட்ட சிங்­களக் குடியேற்­றங்­க­ளுக்கு முக்­கி­ய­மான அடித்­த­ள­மாக விகா­ரை­களும், இரா­ணுவ முகாம்களுமே இருந்­தன. இப்­போதும் இருக்­கின்­றன.

அத்­த­கைய இலக்­குடன் தான், வடக்கில் பர­வ­லாக- தமிழ் மக்கள் செறிந்து வாழு­கின்ற பகு­தி­களில், பௌத்­தர்கள் வசிக்­காத பகு­தி­களில் விகா­ரைகள், அமைக்­கப்­ப­டு­கின்­றன. புத்தர் சிலைகள் வைக்­கப்­ப­டு­கின்­றன.

போருக்குப் பின்னர், வடக்கை சிங்­கள மயப்­ப­டுத்தும் முயற்­சிகள் அர­சாங்­கத்­தி­னதும், இரா­ணு­வத்­தி­னதும் பங்­க­ளிப்­புடன் முழு­மூச்­சாக இடம்­பெற்று வரு­கின்­றன.

இதில் மிக மோச­மாக பாதிக்­கப்­பட்ட பகுதி முல்­லைத்­தீவு மாவட்டம் தான்.

1970களுக்குப் பின்னர், முல்­லைத்­தீவு மாவட்­டத்­தையும், திரு­கோ­ண­மலை மாவட்­டத்­தையும் பிரிக்கும் வகையில், மண­லாறு பிர­தே­சத்தில்- வெலி ஓயா – எனப் பெய­ரி­டப்­பட்டு சிங்­களக் குடி­யேற்­றங்கள் உரு­வாக்­கப்­பட்­டன.

மகா­வலி – எல் வலயம் என்ற திட்­டத்தின் ஊடாக, இங்கு சிங்­கள மக்கள் திட்­ட­மிட்டுக் குடி­யேற்­றப்­பட்­டனர். தமி­ழர்கள் தமது நிலத்­துக்­கான போராட்­டங்­களை தீவிரப்படுத்துவ­தற்கு இந்த சிங்­களக் குடி­யேற்­றங்­களும் ஒரு காரணம்.

போர்க்­கா­லத்தில், இத்­த­கைய சிங்­களக் குடி­யேற்­றங்கள், விடு­தலைப் புலி­களின் நடவடிக்­கை­களால் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டன. மேலும் விரி­வ­டை­யாமல் தடுக்­கப்­பட்­டன.

ஆனாலும், சிங்­களக் குடி­யேற்­றங்­களை முற்­றாகத் துடைத்­த­ழிக்க விடு­தலைப் புலிகளாலும் முடி­ய­வில்லை. அத்­த­கைய நட­வ­டிக்­கை­களை அவர்கள் எடுக்­க­வு­மில்லை.

போர் முடிந்­ததும், சிங்­களக் குடி­யேற்­றங்கள் அரச மற்றும் அதி­கா­ரி­களின் துணை­யுடன் விரி­வாக்கம் அடைந்­தி­ருக்­கின்­றன.

முல்­லைத்­தீவு மாவட்­டத்தின் பல பகு­திகள் இப்­போது சிங்­கள மயமாக்கப்பட்டுள்ளதுடன், தமி­ழர்­களின் பாரம்­ப­ரியக் காணிகள் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

இது, அங்­குள்ள மக்கள் மத்­தியில் எரிச்­ச­லையும் கோபத்­தையும் ஏற்­ப­டுத்தி வரு­கி­றது.

அதை­விட, முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் சிங்­கள மீன­வர்­களின் குடி­யேற்­றங்­களும், அத்­து­மீ­றல்­களும் வேறு நடந்து கொண்­டி­ருந்­தன. இப்­போது இது,

வட­ம­ராட்சி கிழக்கு வரைக்கும் விரி­வ­டைந்­தி­ருக்­கி­றது.

தொழில்சார் கார­ணங்­களை முன்­னி­றுத்தி, வடக்­கிற்குப் பெயரும் சிங்­க­ள­வர்கள், வடக்கி­லுள்­ள­வர்­களின் தொழில்­வாய்ப்­பு­களைப் பறிப்­பது மாத்­தி­ர­மன்றி, அங்­கேயே தங்கி விடு­வதால், தமி­ழரின் பூர்­வீக நிலப்­ப­கு­திகள் சிங்­கள மய­மாக்­கப்­படும் சூழலும் ஏற்­பட்டு வரு­கி­றது.

1980கள் வரைக்கும், வடக்கில் சிங்­கள, பௌத்த அடை­யா­ளங்கள் ஏதும் இல்­லாத பகுதிகள் எல்லாம் இப்­போது, யாத்­திரைத் தலங்­க­ளாக, தென்­ப­குதி சிங்­க­ள­வர்கள் கூடு­கின்ற இடங்­க­ளாக மாறி­யி­ருக்­கின்­றன.

இது திட்­ட­மிட்ட ஒரு நட­வ­டிக்கை. இதனைத் தடுப்­ப­தற்­கான செயல்­மு­றை­களோ வழி­மு­றை­களோ தெரி­யாமல் தமி­ழர்கள் திண்­டா­டு­கி­றார்கள்.

முல்­லைத்­தீவில் நடக்கும் திட்­ட­மிட்ட சிங்­களக் குடி­யேற்­றங்கள் தொடர்­பாக 22 மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள் சென்று பார்­வை­யிட்­டனர். பின்னர் முல்­லைத்­தீவு மாவட்டச் செய­லகம் முன்­பா­கவும் போராட்டம் நடத்­தினர்.

அதன் தொடர்ச்­சி­யாக அண்­மையில் யாழ்ப்­பா­ணத்தில், வடக்கு மாகா­ணத்தைப் பிரதிநிதித்­து­வப்­ப­டுத்தும் பாரா­ளு­மன்ற, மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு இடையில் ஒரு கூட்டம் நடத்­தப்­பட்­டது.

இந்தக் கூட்­டங்­க­ளிலும், கள ஆய்வுப் பய­ணத்­திலும், பல பாரா­ளு­மன்ற, மாகாண சபை உறுப்­பி­னர்கள் கலந்து கொள்­ள­வில்லை. இந்த இரண்டு நிகழ்­வு­க­ளுக்கும் முத­ல­மைச்சர் கூட வர­வில்லை.

வடக்கில் சிங்­களக் குடி­யேற்­றங்­களை தடுக்க வேண்டும் என்று வெளியே குரல் கொடுக்கின்­ற­வர்கள் அமைப்பு ரீதி­யாக ஒன்­றி­ணைய வேண்டும். அதனைத் தடுப்பதற்கான ஆக்­க­பூர்­வ­மான செயல்­மு­றை­களை வரைய வேண்டும்.

ஆனால், வடக்கு மாகா­ணத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சியல் பிர­தி­நி­தி­களால் – கட்சி, அர­சியல், கொள்கை வேறு­பா­டு­களை மறந்து பொது நோக்­கத்­துக்­காக ஒன்­றி­ணைய முடி­ய­வில்லை.

ஐ.தே.க., ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி போன்­றன, வடக்கில் சிங்­களக் குடி­யேற்­றங்­க­ளுக்கு பொறுப்­புக்­கூற வேண்­டிய நிலையில் உள்­ளவை. இந்தக் கட்­சி­களின் ஆட்­சிக்­கா­லங்­களில் சிங்­கள மக்கள் திட்­ட­மிட்டு குடி­யேற்­றப்­பட்­டனர். இப்­போது அவ்­வாறே தொடர்­கி­றது.

இந்தக் கட்­சி­களை வடக்கில் பிர­தி­நி­தித்­துவம் செய்யும் தமிழ் உறுப்­பி­னர்கள், வடக்கு மக்­க­ளுக்­காக குரல் கொடுக்கத் திரா­ணி­யற்­ற­வர்­க­ளாக இருக்­கி­றார்கள்.

அவர்கள் கொழும்புத் தலை­வர்­க­ளுக்கு முண்டு கொடுப்­பதில் காட்டும் ஆர்­வத்தை, வடக்கு மக்­களின் நலனில் அல்­லது, வடக்கு மக்­களின் பிரச்­சி­னை­களில் செலுத்துவதில்லை.

சிங்­களக் குடி­யேற்­றங்­களால் ஏற்­படும் ஆபத்தை, அது தமிழ் மக்கள் மத்­தியில் ஏற்படுத்தி வரும் பயத்தைப் பற்­றிய எந்தக் கவ­லையும், அவர்­க­ளுக்கு கிடை­யாது.

தமிழ்த் தேசியக் கட்­சி­களைப் பிர­தி­நி­தித்­துவம் செய்யும் உறுப்­பி­னர்­களும் கூட பல்­வேறு அர­சியல் மற்றும் வேறு­பா­டு­களைக் காரணம் காட்டி இத்­த­கைய பொது­வான பிரச்­சி­னை­களில் ஒன்­றி­ணைய மறுத்து வரு­கின்­றனர்.

இத்­த­கைய நிலையில், வடக்கின் மீதான சிங்­களக் குடி­யேற்ற அச்­சு­றுத்தல் என்­பது தடுக்­கப்­பட முடி­யாத ஒரு பிரச்­சி­னை­யாக விரி­வ­டைந்து வரு­கி­றது.

யாழ்ப்­பா­ணத்தில் நடந்த கூட்­டத்தில், அடுத்து வரும் ஆண்­டு­களில் வடக்கின் இனப்பரம்­பலில் பாரிய மாற்­றங்கள் நிகழும் என்று எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இந்த இனத்­துவப் பரம்பல் மாற்­றத்தை எதிர்­கொள்­வ­தற்­கான சாத்­தி­யப்­பா­டுகள், வழி­வ­கை­களை ஆராய்­வது முக்­கியம்.

தனியே சிங்­களக் குடி­யேற்­றங்­களைத் தடுப்­பது மாத்­திரம் தான் இதற்குத் தீர்­வா­காது. சிங்­களக் குடி­யேற்­றங்கள் தடுக்­கப்­பட வேண்­டி­யது முக்­கி­ய­மா­னாலும், அதனைச் செய்­வது எப்­படி என்று தெரி­யாமல் எல்­லோரும் கையைப் பிசைந்து கொண்டு நிற்­கி­றார்கள்.

சிங்­களக் குடி­யேற்­றங்­களை தடுப்­ப­தற்கு பாரா­ளு­மன்ற, மாகா­ண­சபை உறுப்­பி­னர்­களை உள்­ள­டக்­கிய ஒரு செய­லணி உரு­வாக்­கப்­பட்ட போதும், அது எப்­படி தடுப்பில் ஈடு­படப் போகி­றது என்ற கேள்வி இருக்­கி­றது.

பல தசாப்­தங்­க­ளாக, சிங்­கள பௌத்த பேரி­ன­வாத தலை­மைகள், கட்­ட­மைக்­கப்­பட்ட இந்த குடி­யேற்­றங்­களை, நிறுவி வரு­கின்­றன. அதனை அவ்­வ­ளவு சுல­ப­மாக தடுத்து விட முடி­யாது, இதனை எதிர்­கொள்­வ­தற்கு, அறி­வியல் பூர்­வ­மா­கவும் தயா­ராக வேண்டும்.

எதிர்ப்புப் போராட்­டங்­களோ, கடி­தங்­களோ இதனைத் தடுக்கப் போவ­தில்லை. மீண்டும் மீண்டும், ஜனா­தி­ப­திக்கும், பிர­த­ம­ருக்கும் கடிதம் எழு­து­வதும், சந்­திப்­பதும் இந்தப் பிரச்­சி­னைக்குத் தீர்வைப் பெற்றுத் தராது.

ஏனென்றால், அவர்­களும் இந்த கட்­ட­மைக்­கப்­பட்ட குடி­யேற்­றங்­களின் பங்­கு­தா­ரர்கள் தான். நேர­டி­யா­கவோ மறை­மு­க­மா­கவோ, ஏதோ ஒரு வகையில் அவர்­களும் அதனை அனு­ம­திக்­கி­றார்கள், அல்­லது ஊக்­கு­விக்­கி­றார்கள்.

எனவே, அவர்­க­ளிடம் இதற்­கான தீர்வைப் பெற முடியும் என்று எதிர்­பார்ப்­பது சரியானதொன்­றாகப் பட­வில்லை.

ஆனாலும், இருக்கும் வாய்ப்­புகள் அனைத்­தையும் பயன்­ப­டுத்திக் கொள்­வதில் தவ­றில்லை.

திட்­ட­மிட்ட சிங்­களக் குடி­யேற்­றங்கள் மாத்­திரம் தான், வடக்கின் இனத்­துவப் பரம்­பலில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான காரணி அல்ல என்­ப­தையும் கவ­னத்தில் கொள்ள வேண்டும்.

தமி­ழர்­களின் வெளி­யேற்­றமும், தமி­ழரின் சனத்­தொகை கட்­டுப்­பாடும் கூட இதற்குக் கார­ணி­க­ளாக இருக்­கின்­றன.

வெளி­நா­டு­களை நோக்­கிய தமி­ழர்­களின் இடப்­பெ­யர்வு, இதில் முக்­கி­ய­மான தாக்­கத்தைச் செலுத்­து­கி­றது.

வடக்­கி­லுள்ள பெரும்­பா­லான குடும்­பங்­க­ளிடம் இன்­னமும் வெளி­நாட்டுக் கனவு ஊறிப் போய் இருக்­கி­றது. அதை­விட, வடக்கில் குழந்­தைகள் பிறப்பும் குறை­வ­டைந்­தி­ருக்­கின்­றன. கிழக்­கிலும் இதே பிரச்­சினை உள்­ளது.

வடக்கை விட்டு தமி­ழர்கள் வெளி­யேறிக் கொண்­டி­ருப்­பதும், சனத்­தொகை கட்­டுப்­பாடும், வடக்கின் இனத்­துவப் பரம்­பலில் விரை­வான மாற்­றங்­க­ளுக்கு ஒரு காரணம் என்­பதை தமிழர்கள் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.

butha-2சிங்களக் குடியேற்றங்களை தடுப்பதற்கான முயற்சிகளும், போராட்டங்களும் தொடரப்பட வேண்டிய சமகாலத்தில், தமிழர்களும் தமது சனத்தொகை வீழ்ச்சியடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் முக்கியமானது.

இத்தகைய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான வழிகளை ஆராய வேண்டும். வடக்கை விட்டு வெளியேறி, வெளியிடங்களிலும், வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்களை மீண்டும் குடியேற்றுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

சிங்களக் குடியேற்றங்களைத் தடுப்பதை விட, இது ஒன்றும் கடினமான பணியாக இருக்காது. ஏனென்றால், இங்கு முடிவெடுக்க வேண்டிய நிலையில் சிங்களத் தலைமைகள் இல்லை. தமிழர்கள் தான் இருக்கிறார்கள்.

சிங்கள பௌத்தமயமாக்கல் என்பது, நன்கு திட்டமிடப்பட்ட ஒரு மூலோபாயம். அந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு தமிழர் தரப்பும், நன்கு திட்டமிடப்பட்ட முயற்சிகளை முன்னெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.

சிறியளவிலான போராட்டங்களினால் மாத்திரம் இது சாத்தியப்படாது, அதற்கும் அப்பால் ஒருங்கிணைந்த ஒரு முயற்சி தேவை.

அந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு தமிழர் தரப்பு தயாராக இருக்கிறதா?

– சத்திரியன்

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.