மிரள வைக்கும் பிரம்மாண்ட முறைகேடு அரசு ஆவணத்தில் ஊதுபத்தி காட்டினால் மறையும் எழுத்துக்கள்!!-(வீடியோ)

0
446

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வசம் உள்ள பொதுப் பணித்துறையில் நூதன முறையில் ஊழல் மற்றும் முறைகேடு நடப்பதாக சம்பந்தப்பட்டவர்கள் பகீர் புகார் அளித்துள்ளனர். முறைகேடு எப்படி நடைபெறுகின்றது என்பதை அவர்கள் விளக்கும் நேரடி காட்சிகளை பிரபல தனியார் தொலைக்காட்சி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காண்பவர்களை அதிர வைக்கின்றது அந்த நூத முறைகேடு. இதன் மூலம் அரசிற்கு கிட்டதட்ட 20 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக அவர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

மணல் அள்ளிக் கொள்வதற்கு ஒரு லாரிக்கு அனுமதி அளித்து அரசு வழங்கும் ரசீதில் ஊதுபத்தின் புகையை காட்டினால் மேஜிக் செய்வது போன்று அதில் உள்ள எழுத்துக்கள் அழிந்து விடுகின்றது. இதை அவர்கள் நேரடியாக செய்து காட்டும் போது காண்பவர்களை மிரள வைக்கின்றது.

ஏதோ மேஜிக் நடப்பது போன்று ஊது பத்தியை காட்ட காட்ட எழுத்துக்களை தானாக மறைகின்றது.

100 லாரிக்கு வழங்கப்படும் ரசீதுகளை வைத்து இந்த நூதன முறையில் லாரி பெயர் தேதி உள்ளிட்ட அனைத்தையும் அழித்து விட்டு தாங்கள் விரும்பு எண்ணிக்கையில் அந்த ரசிதுகளை தயாரித்து 100 லாரி அள்ள வேண்டிய இடத்தில் ஆயிரம் லாரிகளை கொண்டு மணல் அள்ளிச் செல்வதாக அவர்கள் புகார் அளித்துள்ளனர்.

இது அதிகாரிகளின் துணையுடன் நடப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கென பிரத்யேகமான பேனாக்களில் அதிகாரிகள் எழுதிக் கொடுப்பதாவும் சாதாரண பேனாக்களில் எழுதுமாறு வற்புறுத்தினால் அதிகாரிகள் அதை கண்டு கொள்வதில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான முறைகேடு யாருக்கும் தெரியாமல் சர்வசாதாரணமாக நடைபெற்று வருவதாக அவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.

முதலமைச்சர் இதற்கு விளக்கம் அளிப்பாரா எனக் கேட்டு இந்த காணொளி தற்போது சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.