பாவப்பட்ட பணம் தவராசாவின் வீட்டு வாசலில் கட்டி தொங்கவிடப்பட்டது!

0
689

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வழங்கிய பணத்தை தவராசா திருப்பிக் கேட்டதால் அந்தப் பணத்தை திருப்பிக் கொடுப்பதற்காக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கிழக்கு மக்களிடம் இருந்து சேர்த்துக் கொண்டு வந்து தவராசாவின் வீட்டு வாசலில் கட்டி தொங்கவிட்டுச் சென்றுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வழங்கிய 7 ஆயிரம் ரூபாய் பணத்தை வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா திருப்பிக் கேட்டதால் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு ரூபாய் படி 7 ஆயிரம் பேரிடம் சேர்த்த பணத்தைக் கொடுப்பதற்காக வடமாகாண சபைக்கு இன்று (12) வந்துள்ளனர்.

அங்கு அந்தப் பணத்தை வாங்க மறுத்ததால் மாணவர்கள் தவராசாவின் வீட்டுக்குச் சென்று வீட்டு வாசல் கதவில் கட்டி விட்டுச் சென்றனர்.

மக்களிடம் இருந்து சேகரித்த பணப் பொதியில் பாவப்பட்ட பணம் என்று எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000 (1)000 (2)000 (3)

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.