பேண்ட் அணியாததால் ஓட்டலில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகையின் தங்கை

0
349

பேண்ட் அணியாமல் மேலாடை மட்டுமே அணிந்து ஓட்டலுக்கு சென்ற நடிகை யாமி கவுதமின் தங்கையை ஓட்டலில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

தமிழில் `கவுரவம்’, `தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்’ படங்களில் நடித்தவர் நடிகை யாமி கெளதம். இந்தி, தெலுங்கு படங்களிலும் பல விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இந்தியில் உரி எனும் படத்தில் நடித்து வருகிறார்.
அறிமுக இயக்குநர் ஆதித்ய தார் இயக்கும் இந்த படத்தில் விக்கி கவு‌ஷல் நாயகனாக நடிக்கிறார். இந்தியா – பாகிஸ்தான் இடையே உரி பகுதியில் நடந்த யுத்தம் குறித்து இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. செர்பியாவில் நடக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக யாமியுடன் அவரது தங்கை செரிலியும் சென்றிருக்கிறார்.
201806111241508458_1_Yami-Gautam-Sarili2._L_styvpfஅப்போது அங்குள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றுள்ளார் செரிலி. ஆனால் அவரை ஓட்டல் நிர்வாகம் உள்ளே அனுமதிக்கவில்லை.
காரணம் மேலாடை மட்டுமே அணிந்து சென்ற செரிலி கீழாடை பேன்ட் அணியாது சென்றுள்ளார்.
இதன் காரணமாக அவர் உடனே ஓட்டலைவிட்டு வெளியேற்றப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.