திருமணமான சில மாதத்தில் தூக்கில் தொங்கிய புதுப்பெண்!

0
319

தாயின் இறுதிசடங்கில் கலந்து கொள்ள பணமில்லாததால் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் ஜெட்காயாதவ். இவருடைய மகள் அன்ஸிதேவி (22). இவருக்கும் அகிலேஷ்குமார் என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு பின்னர் அகிலேஷ்குமாரும், அன்ஸிதேவியும் தமிழகத்தின் காட்பாடியில் வாடகை வீட்டில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் அன்ஸிதேவியின் அம்மா ஜெட்காயாதவ் சில தினங்களுக்கு முன்னர் காலமானார்.

இதையடுத்து தாயின் இறுதிசடங்கில் கலந்துகொள்ள உடன் வேலை பார்த்தவர்களிடம் அன்ஸிதேவி பணம் கடனாக கேட்ட நிலையில் கிடைக்கவில்லை.

கணவரிடமும் போதிய பணம் இல்லாததால் அவர் இறுதிசடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை.

இதனால் மனம் உடைந்த அன்ஸிதேவி நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அன்ஸிதேவியின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.