-0.8 C
Zurich, CH

மகளிர் ரி-20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது பங்களாதேஸ்

0
124

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் மலேசியாவில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா – பங்களாதேஸ்அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

 இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியவேளை ஹர்மன்ப்ரீத் சிறப்பாக விளையாடி 42 பந்தில் 56 ஓட்டங்களை பெற்றார். இவரைத் தவிர மற்ற வீராங்கனைகள் சொற்ப  ஓட்டங்களில் வெளியேற இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 112  ஓட்டங்களை மட்டுமே சேர்த்தது.

பின்னர் 113  ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பங்களாதேஸ் தேசம் அணி களம் இறங்கியது. இந்தியாவை வீ்ழ்த்தி முதன்முறையாக ஆசிய கோப்பையை ருசித்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன் பங்களாதேஸ்  வீராங்கனைகள் களம் இறங்கினார்கள்.

தொடக்க வீராங்கனைகள் ஷமிமா சுல்தானா 16 ரன்னும் ஆயிஷா ரஹ்மான் 17  ஓட்டங்களை எடுத்து நல்ல அடித்தளம் கொடுத்தனர்.

அதன்பின் வந்த பர்கானா ஹோக்யூ 11 ரன்னும் நிகர் சுல்தானா 27 ரன்னும் ருமானா அஹமது 23 ரன்களும் எடுக்க வங்காள தேசம் வெற்றியை நோக்கிச் சென்றது.

 

வங்காள தேச அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 9 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஹர்மன்ப்ரீத் கவுர் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. 2-வது பந்தில் ருமானா அஹமது பவுண்டரி அடித்தார். 3-வது பந்தில் ஒரு ரன் அடிக்கப்பட்டது. இதனால் கடைசி மூன்று பந்தில் மூன்று ரன்கள் தேவைப்பட்டது.

4-வது பந்தில் கவுர் வீக்கெட் வீழ்த்தினார். இதனால் கடைசி 3 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தில் ஒரு ரன் எடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தப்பட்டது.

இதனால் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்டது. ஜஹனாரா ஆலம் பந்தை எதிர்கொண்டார்.

கவுர் ஒரு ரன் அல்லது ரன் எடுக்க விடக்கூடாது என்ற நிலையில் பந்தை வீசினார். ஆனால் ஜஹனாரா ஆலம் சிறப்பான விளையாடி இரண்டு ரன்கள் அடித்தார்.

இதனால் பரபரப்பான ஆட்டத்தில் வங்காள சேதம் இந்தியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதன்முறையாக பங்களாதேஸ்ஆசியக் கோப்பையை ருசித்துள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.