மேட்டுப்பாளையம் அருகே சோகம்.. நீச்சல் தெரியாத அக்கா-தங்கைகள் குளத்தில் மூழ்கி பலி

0
392

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேட்டுப்பாளையம் காரமடை கன்னார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் சமையல் வேலை செய்து வருகிறார். வரும் இவரது மனைவி சகுந்தலா. ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள். மகாலட்சுமி 12, வைஷ்ணவி 10, என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், இன்று கணவன்-மனைவி இருவரும் வழக்கமாக பணிக்கு சென்று விட்டனர்.
அப்போது வீட்டில் இருந்த இரண்டு மகள்களும், அருகில் உள்ள பெல்லாதிகுளத்திற்கு குளிப்பதற்காக சென்றனர்.
குளத்தில் குளித்து கொண்டிருக்கும்போதே திடீரென நீரின் வேகம் அதிகரித்தது. இருவருக்குமே நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்து, பின்னர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் 2 உடல்களையும் மீட்டனர். இரண்டு சிறுமிகளும் பலியான சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.