பாலித்த ரங்கே பண்­டா­ரவின் மகன் யஷோத வைத்­தி­ய­சா­லையில் கைது: விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறும் உத்­த­ரவு

0
188

 

தனது தந்­தையின் அமைச்­சுக்கு சொந்­த­மான கெப் ரக வாகனம் ஒன்­றினை குடி­போ­தையில் செலுத்திச் சென்று சிலா பம் – பங்­க­தெ­னிய பகு­தியில் வீடொன்­றுடன் மோதி விப த்தை ஏற்­ப­டுத்­தி­யதன் ஊடாக வீட்­டுக்கு சேதம் விளை­வித்­தமை தொடர்பில் பொலி­ஸாரால் தேடப்­பட்டு வந்த நீர்ப்­பா­சன, நீர் வளங்கள் மற்றும் அனர்த்த முகா­மைத்­துவ இரா­ஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்­டா­ரவின் மகன் யஷோத ரங்கே பண்­டார கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

நேற்று காலை ஆராச்­சி­கட்­டுவ பொலி­ஸா­ரினால் ஸ்ரீ ஜய­வர்­த­ன­புர வைத்­தி­ய­சா­லையில் வைத்து அவர் இவ்­வாறு கைது செய்­யப்­பட்டார்.

அரச சொத்­தொன்­றினை தவ­றாக பயன்­ப­டுத்­தி­யமை, குடி­போ­தையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்­ப­டுத்­தி­யமை, வாளொன்­றினை உடன் வைத்­தி­ருந்தன் ஊடாக தடை செய்­யப்­பட்ட கத்­திகள் கட்­டளைச் சட்­டத்தின் கீழ் குற்றம் ஒன்­றினை புரிந்­தமை உள்­ளிட்ட 4 குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் அவர் இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர கேச­ரிக்கு தெரி­வித்தார்.

இந் நிலையில் கைதான யஷோத ரங்கே பண்­டா­ரவை சிலாபம் நீதி­வானின் ஆலோ­ச­னைக்கு அமைய நேற்று ஸ்ரீ ஜய­வர்­தன புர வைத்­தி­ய­சா­லைக்கு சென்று பார்­வை­யிட்ட நுகே­கொடை நீதிவான் இம்­மாதம் 12 ஆம் திகதி வரை அவரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்டார்.

கடந்த புதன் கிழமை, சிலாபம் – புத்­தளம் பிர­தான வீதியில் ஆரச்­சி­கட்­டுவ பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பங்­கெ­தெ­னிய – கொட்­ட­பிட்­டிய சந்­தியில் யஷோத ரங்கே பண்­டார செலுத்­திய கெப் ரக வாகனம் கட்­டுப்­பாட்டை இழந்து அருகில் உள்ள வீட்டின் சுவர்­களை இடித்­துக்­கொண்டு சென்­றதில் விபத்து இடம்­பெற்­றது.

வீட்டில் உள்­ள­வர்கள் பிரி­தொரு அறையில் உறக்­கத்தில் இருந்த நிலையில் அவர்­க­ளுக்கு காயங்கள் ஏற்­ப­டாத போதும் வீட்­டுக்கு பலத்த சேதம் ஏற்­பட்­டது.

இதன்­போது கெப் வண்­டியை செலுத்திச் சென்ற யஷோத ரங்கே பண்­டா­ர­வுக்கு கடும் காயம் ஏற்­பட்­ட­துடன் அவ­ருடன் இருந்த நண்­ப­ருக்கு சிறு காயம் ஏற்­பட்­டி­ருந்­தது.

இந் நிலையில் காய­ம­டைந்த யஷோத, சிலாபம் வைத்­தி­ய­சா­லையில் இருந்து கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்டார்.

எனினும் அங்கு சிகிச்­சை­களின் இடை நடுவே சுய விருப்பின் பேரில் அவர் சிகிச்­சை­களை நிறைவு செய்­து­கொண்டு வைத்­தி­ய­சா­லையை விட்டு வெளி­யே­றி­யி­ருந்தார்.

இந் நிலையில் அவரைக் கைது செய்ய பொலிஸார் தேடி வந்­தனர்.

இத­னி­டையே தேசிய வைத்­தி­ய­சா­லையில் இருந்து வெளி­யே­றிய யஷோத, ஸ்ரீ ஜய­வர்­த­ன­புர வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சைப் பெறு­வது தொடர்பில் பொலி­ஸா­ருக்கு தகவல் கிடைத்­துள்­ளது.

இத­னை­ய­டுத்தே சிலாபம் நீதி­வா­னுக்கு அறிக்கை சமர்­பித்­துள்ள ஆராச்­சி­கட்­டுவ பொலிஸார் நேற்று காலை யஷோத ரங்­கே­பண்­டார சிகிச்சைப் பெற்­று­வந்த வைத்­தி­ய­சா­லைக்கே சென்று அவரைக் கைது செய்­தனர்.

யஷோத ரங்கே பண்­டார விபத்­துக்­குள்­ளான போது அவர் செலுத்­திய கெப் வண்டி நீர்ப்­பா­சன அமைச்­சுக்கு சொந்­த­மா­னது என்­ப­துடன் அந்த வண்­டியில் இருந்து வொட்கா மது­பான போத்தல், சோடா போத்தல், உண­வுகள் ( சைடிஸ்), வாள் ஒன்று, விக்கட் தடி ஒன்று, பேஸ் போல் மட்டை ஒன்று உள்­ளிட்ட பொருட்கள் பொலி­ஸாரால் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.

இந் நிலை­யி­லேயே யஷோத ரங்கே பண்­டா­ர­வுக்கு எதி­ராக சிலாபம் நீதி­வா­னுக்கு சமர்­பிக்­கப்­பட்ட பீ அறிக்­கையில் அரச சொத்­தொன்­றினை தவ­றாக பயன்­ப­டுத்­தி­யமை, குடி­போ­தையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்­ப­டுத்­தி­யமை, வாளொன்­றினை உடன் வைத்­தி­ருந்தன் ஊடாக தடை செய்­யப்­பட்ட கத்­திகள் கட்­டளைச் சட்­டத்தின் கீழ் குற்றம் ஒன்­றினை புரிந்­தமை உள்­ளிட்ட 4 குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன.

இதற்கு முன்னரும் 2016 ஆம் ஆண்டு யஷோத ரங்கே பண்டார செலுத்திய ஜீப் வண்டியில் சிக்கி பாதசாரி ஒருவர் உயிரிழந்திருந்தார்.

அத்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் திகதி அவரால் ஏர்படுத்தப்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, அவர்களது இரு பிள்ளைகள் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.