சூர்யா பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட சாயிஷா – வைரலாகும் வீடியோ

0
259

சூர்யா நடிப்பில் உருவான `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இடம்பெற்ற சொடக்கு பாடலுக்கு நடிகை சாயிஷா நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் பொங்கலுக்கு ரிலீசான படம் `தானா சேர்ந்த கூட்டம்’.
இந்த படத்தில் அனிருத் இசையில் உருவான `சொடக்கு’ பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. யூடியூப்பிலும் அதிகளவில் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது.
இந்த நிலையில், சொடக்கு பாடலுக்கு தான் நடனமாடும் வீடியோவை சாயிஷா அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

201806091804349682_1_Sayyeshaa-Dance-Sodakku-SOng2._L_styvpf

சாயிஷா தற்போது கார்த்தி ஜோடியாக கடைக்குட்டி சிங்கம், விஜய் சேதுபதி ஜோடியாக ஜுங்கா, ஆர்யா ஜோடியாக கஜினிகாந்த் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இதில் கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஜுங்கா படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஜுன் 11-ஆம் தேதி நடைபெறுகிற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக இந்த ஆண்டு சாயிஷாவுக்கு கொண்டாட்டமாக வருடமாக அமைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.
சூர்யா – கே.வி.ஆனந்த் இணையும் புதிய படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க சாயிஷாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சாயிஷாவின் நடனத்தை பார்க்க: https://twitter.com/sayyeshaa/status/100531953197433241

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.