சனிக்கு 2, 12-ல் ராகு இருந்தால் மனைவியால் அதிர்ஷ்டமாம்!

0
535

சனிக்கு 2 அல்லது 12-ல் ராகு இருந்தால் 28 வயதில் திருமணம் நடைபெறும். இந்த ஜாதகர்களுக்கு மனைவி வந்த நேரம் மங்கலம் பொங்கும்.

செல்வம் கொழிக்கும் நேரமாகும். சனிக்கு 2-12-7-ல் எந்தக் கிரகமும் இல்லாமல் இருக்குமானால் வாழ்க்கை வளமானதாக அமையாது.

சனிபகவான் பெண்கள் ஜாதகத்தில் லக்னத்தையும் ராசியைப் பார்த்தாலும், 7-ம் பாவத்தையும், ராசியைப் பார்த்தாலும் 7-ம் அதிபதியையும், லக்னாதிபதியை பார்த்தாலும் இளமையில் விதவையாகும் நிலை ஏற்படும்.

தம்பதிகள் இருவரும் தாய்க்கு தாயாய், நட்புக்கு இலக்கணமாய், கருத்தொருமித்த ஜோடிகளால், காதல் வசப்படும் யோகம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

• இருவரின் லக்னமும் ஒன்றுக்கொன்று திரிகோணமாய் அமைவது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும்.

• இருவரின் சந்திரனும் ஒன்றுக்கொன்று திரிகோணமாய் அமைவது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும்

• இருவரின் சூரியனும் ஒன்றுக்கொன்று திரிகோணமாய் அமைவது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும்

• இருவரின் புதனும் ஒன்றுக்கொன்று திரிகோணமாய் அமைவது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும்

• இருவரின் குருவும் ஒன்றுக்கொன்று திரிகோணமாய் அமைவது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும்

• இருவரின் சுக்கிரனும் ஒன்றுக்கொன்று திரிகோணமாய் அமைவது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும்

• புதன் – செவ்வாய் – ஒரு ஒன்றுக்கொன்று 60 பாகை வித்தியாசத்தில் இருப்பது நலம் தரும் திருமண வாழ்க்கையைத் தரும்.

• லக்னம், சந்திரன், சூரியன், புதன் ஒன்றுக்கொன்று 7-7 ஆக அமைவது இருவரும் காதல் கொள்ளும் நிலையாகும்.

• இருவரின் லக்னமும், சந்திரனும், சூரியனும் ஒரே ராசி, பாகையில் அமைந்தால் இருமனமும் ஒருமனமாக அமையும் யோகம்.

• இருவரின் ஜாதகத்தில் சந்திரனும், லக்னமும், புதன் வீட்டில் குரு வீட்டில், செவ்வாய் வீட்டில், சுக்கிரன் வீட்டில் அமைவது சிறப்பான திருமண வாழ்க்கையைத் தரும்.

• ஒருவரின் சூரியன் இருக்கும் ராசியில் மற்றவரின் சந்திரன் இருப்பது நல்உறவைத் தரும்.

• இருவரின் லக்னமும், சந்திரனும் ஒன்றுக்கொன்று 6-8 ஆகவோ, 2-12 ஆகவோ அமைவது இருவருக்கும் கருத்து வேறுபாட்டைத் தரும். வேற்றுமையும் தொடர் கதையாய் தொடரும் என்பதாம்.

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.