தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்த கிளிநொச்சி இளைஞர் உயிரிழப்பு!

0
193

கொழும்பு – தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்த கிளிநொச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தாமரைக் கோபுரத்தின் 16 ஆம் மாடியிலிருந்து வீழ்ந்ததில் இந்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

கிளிநொச்சி – அத்தரேகுளம் பகுதியை சேர்ந்த 19 வயதான  கோனேஸ்வரன் நிதர்சன்  என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

இந்த அனர்த்தம் இன்று பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.