அடக்கம் செய்து 8 மணித்தியாலத்தில் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை: அதிர்ச்சி சம்பவம்- (வீடியோ)

0
1391

பிறந்த குழந்தை இறந்து விட்டதாக நினைத்து அடக்கம் செய்த பின்னர் பரிசோதனைக்காக மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட வேளையில் குழந்தை உயிருடன் இருந்த சம்பவம் பிரேஸில் நாட்டில் இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் குறித்த குழந்தையினை தோண்டி எடுக்கும் வேளையில் அழுக்குரல் ஒன்று கேட்கப்பட்டுள்ளது. குழந்தை 50cm ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய வம்சாவளியினை சேர்ந்த 15 வயதுடைய இந்திய பெண் குளியலறையில் குளித்துக்கொண்டிருக்கும் வேலையில் குறித்த குழந்தையினை பிரசவித்துள்ளார்.

குறித்த குழந்தை கிடைக்கும் போது குழந்தையின் தலை நிலத்தில் அடிப்பட்டு விட்டாத பொலிஸாரிடம் அப்பெண் தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் குறித்த குழந்தைக்கு எவ்வித சிகிச்சையும் அளிக்காது, குழந்தை இறந்து விட்டதாக நினைத்து தன் தாயிடம் தெரிவித்த வேளையில், குறித்த பெண்ணின் தாயும் குழந்தை இறந்து விட்டதாக பரிசோதித்து உறுதிப்படுத்தியதன் பின்னரே குழந்தையினை புதைத்ததாக பொலிஸாரிடம் குழந்தையின் தாய் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த குழந்தை உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், பெண்ணின் தாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

4D05434400000578-5817763-image-a-99_1528391269590

4D05433800000578-5817763-image-a-103_1528391295346

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.