சவுதியில் வெளியான முதல் இந்திய படம் காலா

0
240

நடிகா் ரஜினிகாந்தின் காலா திரைப்படம் சவுதி அரேபியாவில் வெளியான முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இஸ்லாமியா்களின் நாடான சவுதி அரேபியாவில் கலாசாலத்தை முன்னிருத்தில் 1980களில் சினிமா படங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

தற்போது சவுதியின் பட்டத்து இளவரசராக இருக்கும் முகமது பின் சல்மான், பதவிக்கு வந்த பின்னா் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா்.

பெண்கள் வாகனம் ஓட்டுவது, விளையாட்டு மைதானங்களில் பெண்கள் கண்டுகளிக்க அனுமதி உள்ளிட்ட விஷயங்களை அவா் செயல்படுத்தியுள்ளாா்.

அதன்படி கடந்த டிசம்பா் மாதம் சினிமா திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை முகமது பின் சல்மான் நீக்கினாா்.

இதனைத் தொடா்ந்து அங்கு படங்கள் வெளியாகத் தொடங்கின. இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள காலா திரைப்படம் சவுதி அரேபியாவிலும் திரையிடப்பட்டுள்ளது.

சவுதியில் காலா திரையிடப்பட்டதைத் தொடா்ந்து சவுதி அரேபியாவில் திரையிடப்பட்ட முதல் இந்திய படம் என்ற பெயரை காலா பெற்றுள்ளது. இந்த தகவலை படக்குழுவினா் பெருமையுடன் கொண்டாடி வருகின்றனா்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.