மேடம் துஸ்ஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் விராட் கோலி மெழுகுச் சிலை திறப்பு

0
309

தில்லியில் உள்ள பிரபல மேடம் துஸ்ஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியின் மெழுகுச் சிலை புதன்கிழமை முதல் பார்வையாளர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது.

லண்டனை அடிப்படையாகக் கொண்ட மேடம் துஸ்ஸாட்ஸ் அருங்காட்சியகத்தின் ஒரு கிளை இந்தியத் தலைநகர் தில்லியிலும் செயல்பட்டு வருகிறது. மெழுகுச் சிலைகளுக்கு பெயர்பெற்ற இந்த அருங்காட்சியங்களில் உலக பிரபலங்கள் பலரின் தத்ரூப சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதில் தில்லியில் உள்ள அருங்காட்சியகத்தில் லயோனல் மெஸ்ஸி, கபில் தேவ், உசைன் போல்ட் ஆகியோரின் வரிசையில் விராட் கோலியின் சிலை தற்போது நிறுவப்பட்டுள்ளது.

இந்த மெழுகுச் சிலை வடிவமைப்புக்காக கோலியின் உருவ அடிப்படையில் 200 அளவைகளும், சில புகைப்படங்களும் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

10அதிக வருவாய்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் கோலி
அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள, உலகின் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி 83-ஆவது இடத்தில் உள்ளார்.

அவரது வருவாய் ரூ.160 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இப்பட்டியலின் முதல் 100 இடங்களுக்குள்ளாக வீராங்கனைகள் எவரது பெயரும் இடம்பெறவில்லை. முதல் 3 இடங்களில் முறையே அமெரிக்க குத்துச்சண்டை வீரர் ஃப்ளாய்டு மேவெதர், ஆர்ஜென்டீனா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி, போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் உள்ளனர்.

பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் 5-ஆவது இடத்திலும், ஸ்விட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் 7-ஆவது இடத்திலும் உள்ளனர்.

25Visitors take photographs and selfies with the wax statue of Indian Cricket Skipper Virat Kohli during the launch of his statue at the Madame Tussads Gallery in New Delhi on wednesday. Express Photo by Tashi Tobgyal New Delhi 060518Visitors take photographs and selfies with the wax statue of Indian Cricket Skipper Virat Kohli during the launch of his statue at the Madame Tussads Gallery in New Delhi on wednesday. Express Photo by Tashi Tobgyal New Delhi 06051816

Visitors take photographs and selfies with the wax statue of Indian Cricket Skipper Virat Kohli during the launch of his statue at the Madame Tussads Gallery in New Delhi on wednesday. Express Photo by Tashi Tobgyal New Delhi 060518

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.