கள்ளக்காதலனுக்கு மகளை திருமணம் செய்து வைத்த தாய்..!!

0
1482

 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள த.பொட்டக்கொல்லை அடுத்த வடகடல் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி சத்யா (வயது 45). இவர்களது மகள் செல்வி (வயது 16, பெயர் மாற்றப்பட்டுள்ளது).

இந்தநிலையில் அந்த பகுதியை சேர்ந்த பிச்சை மகனும் தொழிலாளியுமான ராஜூ (21) என்பவருக்கும், சத்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கு கள்ளக்காதலாக மாறியது.

இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்ததோடு, பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசம் அனுபவித்து வந்தனர். மேலும் சத்யா வீட்டில் தனியாக இருக்கும் போது ராஜூவை வரவழைத்து அங்கு சென்று உல்லாசம் அனுபவித்துள்ளார்.

சத்யாவுடனான பழக்கத்தைப் பயன்படுத்தி அவரது மகள் செல்வியுடனும் ராஜூ பழகியுள்ளார். இதன் மூலம் அவருடனும் உல்லாசம் அனுபவித்துள்ளார். இதில் செல்வி கர்ப்பமானார்.

மகள் கர்ப்பமானது வெளியே தெரிந்தால் அவமானமாகி விடும் என்று எண்ணிய சத்யா, ராஜூவுக்கு தனது மகளை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.

இதன் மூலம் ராஜூவுடனான தனது கள்ளக்காதலையும் நீட்டித்து கொள்ளலாம் என்று எண்ணினார். அதன்படி நடந்த சம்பவங்களை மறைத்து ராஜூவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு செல்வியை சத்யா திருமணம் செய்து வைத்தார்.

இதையடுத்து செல்வியும், ராஜூவும் அங்கு தனியாக குடும்பம் நடத்தி வந்தனர். இதன் மூலம் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

இதனிடையே மகளை ராஜூவுக்கு திருமணம் செய்து வைத்த பிறகும், சத்யா தனது கள்ளக்காதலை கைவிடவில்லை. மகள் இல்லாத நேரத்தில் ராஜூ வீட்டிற்கு சென்று அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

கடந்த 6 மாதத்திற்கு முன்பு ராஜூவும், தாய் சத்யாவும் உல்லாசமாக இருப்பதை செல்வி நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்ற அவர், எப்படியாவது தனது கணவரை, தாயிடம் இருந்து பிரித்து விட வேண்டும் என்று முடிவு செய்து, வடகடலில் உள்ள வீட்டை காலி செய்து விட்டு தஞ்சைக்கு தனது கணவரை அழைத்து சென்று அங்கு அவருடன் குடும்பம் நடத்தி வந்தார்.

மேலும் தனது தாயுடனான பழக்கத்தை கைவிடுமாறும் அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பும் தகராறு ஏற்பட்டது. அப்போது ராஜூ, செல்வியிடம் ஏன் இங்கு நீ குழந்தையுடன் கஷ்டப்படுகிறாய், உனக்கு துணையாக உனது தாய் சத்யாவை வேண்டுமென்றால் அழைத்து வா என்று கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன் காரணமாக இருவரும் நேற்று தஞ்சையில் உள்ள வீட்டை காலி செய்து விட்டு வடகடலுக்கு வந்து விட்டனர். அங்கு வந்ததும் செல்வியை அவரது தாய் சத்யா, சத்யாவின் தாய் சாந்தி, ராஜூ மற்றும் அவரது தாய் மாரியம்மாள் ஆகியோர் கொடுமைப்படுத்தி, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதில் சிக்கி தவித்த செல்வி, நடந்த சம்பவம் குறித்து அவரது தந்தை பாண்டியனிடம் தெரிவித்தார்.

மகள் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த பாண்டியன், செல்வியை ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று புகார் செய்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி ராஜூ, சத்யா, சாந்தி, மாரியம்மாள் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.