மனைவி கொலை செய்த கணவரின் மண்டையோட்டைக் கண்டு கதிகலங்கிய இந் நாள் கணவர்!

0
382

ரஷ்யாவில் நபர் ஒருவர் தனது வீட்டு தோட்டத்தை தோண்டிய போது தனது மனைவியின் முன்னாள் கணவரின் எலும்புக் கூடுகளை கண்டெடுத்துள்ளார்.

தனது மனைவியுடன் வசித்து வந்த 60 வயதான முதியவர் வீட்டுத்தோட்டத்தில் உருளைக்கிழங்கு செடியை நடுவதற்காக தோட்டத்தை தோண்டியுள்ளார்.

அதன் போது மண் உள்ளிருந்து மண்டை ஓடு மற்றும் எலும்புகள் வெளியே வந்துள்ளது.

மண்டை ஓட்டைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் மனைவியிடம் கேட்ட போது

madaiiiமண்டையோடு தனது முதல் கணவருடையது எனவும் 21 ஆண்டுகளுக்கு முன்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் கணவரை கோடரியால் அடித்து கொன்று தோட்டத்தில் புதைத்து விட்டதாக கூறியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த கணவர் மனைவி பற்றி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கணவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மனைவியை பொலிஸார் வீட்டுக் காவலில் வைத்து விசாரணை செய்துள்ளனர்.

விசாரணைகளில் மனைவி பொலிஸாரிடம் தனது முன்னாள் கணவரை எதற்காக எவ்வாறு கொன்றார் கொன்ற பின் எவ்வாறு புதைத்தார் என்பதையெல்லாம் வார்த்தைகளாலும் செயல்களாலும் செய்து காட்டியுள்ளார்.

அதன் பின்னர் குறித்த மூதாட்டியின் முன்னாள் கணவர் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று எலும்புக் கூடுகளை மீட்டெடுத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

குறித்த மூதாட்டியின் வயதையும் கொலையை அவர் ஒப்புக் கொண்டதாலும் அதிகபட்ச தண்டனையாக குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும் என அரச தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.