குழந்தைக்கு குறி வைத்த கொள்ளையனை ஆக்சன் ஹீரோவாக மாறி சுட்டுக் கொன்ற பெண் வைரலாகும் வீடியோ

0
773

பள்ளி அருகே குழந்தைகள் மற்றும் பெண்கள் என குடும்பத்துடன் நின்றவர்களிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை அடிக்க முயன்ற கொள்ளையனை சாதுர்யமாக செயல்பட்டு சுட்டு தள்ளிய ஆஃப் டுடியில் இருந்து பெண் போலிஸ் அதிகாரிக்கு சமூக வலைதளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

இந்த சம்பவம் ப்ரேசில் நாட்டில் சாவ் பவுலோ என்ற இடத்தில் நடைபெற்றுள்ளது.

தனது மகள் படிக்கும் பள்ளி நிகழ்ச்சிக்காக சில்வா சாஸ்ட்ரே (இவர் ஒரு மிலிட்டரி போலிஸ் அதிகாரி) என்ற பெண் தனது மகளுடன் வந்துள்ளார். அவருடன் மற்ற குழந்தைகளும் அவர்களது பெற்றோர்களும் பள்ளியின் நுழைவாயில் அருகே கும்பலாக நின்றுள்ளனர்.

பெண்கள் குழந்தைகள் நிற்பதை பார்த்த கொள்ளையன் பெண்கள் தானே யாரு நம்மல என்ன போறா என எண்ணி திடீர் என அங்கு வந்து தூப்பாக்கி நீட்டி மிரட்டுகின்றான் கொள்ளையன்.

நாம் ஒரு பெண் போலிஸ் அதிகாரி இருக்கும் கூட்டத்தில் கொள்ளை அடிக்க முயற்சிக்கின்றோம் என்பதை அறியாத கொள்ளையன் கூட்டத்தில் உள்ள ஒரு குழந்தையின் மீது துப்பாக்கியால் குறி வைக்கின்றான்.

அங்கிருந்த எல்லா பெண்களும் தங்களது குழந்தையை பிடித்துக் கொண்டு அலறி ஓடுகின்றனர். அனால் ஒரே ஒரு பெண் மட்டும் ஓடவில்லை.

உடனடியாக சுதாரித்துக் கொண்டார் ஆஃப் டுடியில் இருந்த அந்த பெண் போலிஸ் அதிகாரி சில்வா சாஸ்ட்ரே, தனது கை பையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அதை லோடு செய்து கொள்ளையன் சற்றும் எதிர்பார்க்காத வகையில் அவனது நெஞ்சில் சுடுகின்றார் அந்த பெண் போலிஸ் அதிகாரி.

நெஞ்சில் இரண்டு குண்டு காலில் ஒரு குண்டு என முன்று ரவுண்டு சுட்டதில் சுழன்று கீழே விழுந்தான் கொள்ளையன். கீழே விழுந்ததும் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் இரண்டு முறை சுடுகின்றான் கொள்ளையன் சாதுர்யமாக அந்த பெண் தப்பிக்கின்றார்.

பின்னர் கொள்ளையன் அருகே துணிச்சலாக சென்று தனி ஆளாக அவனை புறட்டி போட்டு நாளு மிதி மிதிக்கின்றார் , அவனிடமிருந்த துப்பாக்கியை தட்டி வடுகின்றார் அந்த பெண் போலிஸ் அதிகாரி.

”அவன் துப்பாக்கிய காட்டியதும் குழந்தைகளை சுட்டு விடக் கூடாது என்பதற்காகவும் நான் அவனை சுட்டு தள்ளினேன்” என அந்த பெண் போலிஸ் அதிகாரி கூறியுளளார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கொள்ளையன் மறுநாள் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளான்.

சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.