ரஷ்யாவில் நடை பாதையில் காத்திருந்த மாணவர்கள் மீது மோதிய கார்! தூக்கி வீசப்படும் அதிர்ச்சி வீடியோ!!

0
338

ரஷ்யாவில் சாலையைக் கடப்பதற்காக காத்திருந்த மாணவர்கள் மூவர் மீது ஒரு கார் மோதி அவர்கள் தூக்கி வீசப்படும் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

மாஸ்கோ அருகில் மூன்று மாணவர்கள் சாலையைக் கடப்பதற்காக லெவல் கிராசிங் அருகே காத்திருக்கிறார்கள்.

அப்போது தவறான பாதையில் வேகமாக வந்த கார் ஒன்று சாலையில் வந்து கொண்டிருந்த கார் மீது மோதிவிட்டு சாலையைக் கடப்பதற்காக காத்திருக்கும் மாணவர்கள் மீது மோதுகிறது.

அவர்கள் மூவரும் பல அடி உயரத்திற்கு தூக்கி வீசப்படுகிறார்கள்.

அதில் இரண்டு மாணவர்கள் மீது மீண்டும் மோதி அவர்களை இழுத்துச் செல்கிறது அந்தக்கார். கார் வேகமாக வருவதைப் பார்த்து இன்னொரு மாணவர் கார் தன்மீது மோதாமல் தவிர்க்க தப்பி ஓடுகிறார்.

ஒருவழியாக கார் நிற்க, காரிலிருந்து ஒரு பெண் இறங்குகிறார்.

விபத்தைப் பார்த்தவர்கள் அந்த மாணவர்கள் நிச்சயம் இறந்திருக்க வேண்டும் என எண்ணும் அளவிற்கு மோசமாக அந்த விபத்து அமைந்தாலும் அதிருஷ்டவசமாக மூவரும் உயிர் பிழைத்து விட்டனர்.

தலை கை கால்களில் முறிவுகளுடன் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதில் ஆச்சரியத்திற்குரிய விடயம் என்னவென்றால், CCTV கெமராவில் பதிவாகியுள்ள அந்த காரை ஓட்டிய பெண் தப்பிவிட்டார். அவரை இன்னும் பொலிசார் கைது செய்யவில்லை.

சிக்னலை மதிக்காமல் அந்தப் பெண் வேகமாகச் சென்றதே விபத்துக்கு காரணம் என விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

4CECBFA700000578-5807081-image-m-42_15281905335304CECBF1700000578-5807081-image-a-21_15281902582284CECBF1F00000578-5807081-The_driver_of_the_Peugeot_307_was_seen_getting_out_the_car_at_Do-a-40_1528194067404

4CECBF6300000578-5807081-image-a-29_1528190312987The crash scene was in Moscow region close to one of Moscow’s major airports, Domodedovo, used by British Airways

4CECBF8F00000578-5807081-The_blue_Peugeot_307_damaged_the_front_of_this_vehicle_when_it_r-a-4_1528192835043The blue Peugeot 307 damaged the front of this vehicle when it rammed into it before striking the pedestrians

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.