இது உனது நாடில்லை- அமெரிக்க ரயிலில் இனவெறி ( காணொளி இணைப்பு )

0
706

அமெரிக்காவின் நியுயோக்கின்; ரயிலொன்றில் தனது மகள் அமர்வதற்கு ஆசனத்தை வழங்காத ஆசிய நாட்டை சேர்ந்த பெண்மணியை கறுப்பின பெண்மணியொருவர் இனவெறியுடன் ஏசும் வீடியோ வைரலாகிவருகின்றது.

ரயிலில் பயணித்த பயணியொருவர் எடுத்துள்ள இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

வீடியோவின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட கறுப்பின பெண்மணி எனது மகள் கறுப்பினத்தை சேர்ந்தவள் என்பதால் ஆசிய பெண்மணி ஆசனத்தை வழங்கவில்லை என ஏசுவதை காண முடிகின்றது.

அவ்வேளை ஆசிய பெண்மணி அவரை மௌனமாகயிருக்குமாறு தெரிவிக்கின்றார்.

அதற்கு கறுப்பின பெண்மணி நான் ஏன் அமைதியாகயிருக்கவேண்டும் ? நீ எனது மகளுடன் விளையாடுவாய் நான் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டுமா என கேட்டு தகாத வார்த்தைகளை பயன்படுத்துகின்றார்.

அதனை தொடர்ந்து ஆசிய பெண்மணி வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துமாறு எச்சரிக்கின்றார்.

அதன் காரணமாக சீற்றமடைந்த கறுப்பின பெண்மணி அவரை ஏசுகின்றார்

பின்னர் தனது மகளை அந்த ஆசனத்தில் அமருமாறும் ஆசிய பெண்மணியை ஆசனத்திலிருந்து தள்ளிவிடுமாறும் மகளை கேட்கின்றார்.

மகளும் அவ்வாறே செய்கின்றார்,அதன் பின்னர் அவர் ஆசிய பெண்மணியை தள்ளி விடுவதை காணமுடிகின்றது.

இதனை தொடர்ந்து ஆசிய பெண்மணி ரயிலிற்குள் விழுகின்றார்.

இதன் காரணமாக சீற்றமடைந்த சக பயணிகள் கறுப்பின பெண்ணை எச்சரித்தபடி ஆசிய பெண்மணியை தூக்கிவிடுகின்றனர்.

ஆசிய பெண்மணி மீண்டும் ஆசனத்தில் அமரமுயன்றவேளை கறுப்பின பெண்மணி அவரை எச்சரிக்கின்றார்.

அதன் பின்னரும் இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் தொடர்வதை வீடியோ காண்பிக்கின்றது.

கறுப்பின பெண்மணி தகாதவார்த்தைகளை பயன்படுத்துவதுடன் இனரீதியாகவும் நிந்திக்கின்றார்.

ஒரு கட்டத்தில் அவர் ஆசிய பெண்மணி மீது துப்பமுயல்வதை வீடியோ காண்பிக்கின்றது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.