துப்பாக்கிச்சூட்டில் இறந்த 17 வயது ஸ்னோலின் உடல் அடக்கம்!!: கதறியழுத ஆயிரக்கணக்கானோர்-(வீடியோ)

0
589

தூத்துக்குடியில் கடந்த மே 22 அன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது காவல் துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இறந்த 17 வயது மாணவி ஸ்னோலின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் உடல்களில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முதல் கட்டமாக ஏழு பேரின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை நடத்தினர்.

_101855440_f22b98ad-2b1a-4efe-a736-204f2ee22486இதனிடையே துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் உடலை பிரேத பரிசோதனை நடத்த தடை விதிக்க கோரியும் ஜிப்மர் மற்றும் எய்ம்ஸ் மருத்துவ குழு தலைமையில் பிரேதபரிசோதனை நடத்தபட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டதின் அடிப்படையில் ஏற்கனவே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட ஏழு பேரின் உடலை மட்டும் மறு பிரேத பரிசோதனை நடத்தி உறவினர்களிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்த ஆறு பேர் அடங்கிய மருத்துவ குழு ஏழு பேரின் உடலை மறு பிரேத பரிசோதனை நடத்தி உயிர்யிழந்தவர்களின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

ஆனால் ஸ்டைர்லைட் ஆலையை முற்றிலும் அகற்றி அந்த இடத்தில் துப்பாக்கி சூட்டில் உயிர்யிழந்த 13 பேருக்கும் நினைவுத் தூண் அமைக்க வலியுறுத்தி தமிழரசன்,காளியப்பன் மற்றும் ஸ்னோலின் ஆகியோரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர்.

இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர், வட்டாச்சியர் மற்றும் வருவாய் கோட்டாச்சியர் தலைமையில் உறவினர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. நேற்று காளியப்பன் மற்றும் தமிழரசனின் உடலை உறவினர்கள் பெற்று கொண்டனர்.

ஸ்னோலின் உடலை நேற்று இரவு வரை அரசு எங்களது கோரிக்கையை ஏற்றால் மட்டுமே உடலை பெற்று கொள்வோம் என உறவினர்கள் உடலை வாங்க மறுத்து வந்தனர். இன்று காலை மீண்டும் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

_101856246_snowlinfuneralphotos-3இப்பேச்சுவார்த்தையில் இனி ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் இயங்க தமிழக அரசு அனுமதிக்காது,விரைவில் உங்களது கோரிக்கைகள் அனைத்தும் அரசு நிறைவேற்றும் என உத்தரவாதம் அளித்ததின் பெயரில் இன்று பகல் 11 மணியளவில் ஸ்னோலின் உடலை உறவினர்கள் பெற்று கொண்டனர். அரசு மருத்துவமனையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் ஸ்னோலின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு மினி சகாயபுரம் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் முது நிலை காவல் கண்காணிப்பாளர் விபூல் பிரிட்டோ பிரசாந்த, ரஜ்வீர், நிதின்குமார், அருண் தியாகி, லால்பகர் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட தேசிய மனித உரிமை ஆணையத்தின் குழு நேற்று மாலை தூத்துக்குடி வந்தடைந்தது.

இந்தக் குழு முதற்கட்டமாக நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் ஆலோசனை நடத்தியது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தென்மண்டல ஐ.ஜி. சைலேஸ்குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார், தூத்துக்குடி எஸ்.பி. முரளி ரம்பா ஆகியோர் கலந்து கொண்டனர். மனித ஆணைய குழு இன்று தூத்துகுடி மாவட்டதில் கலவரம் நடைபெற்ற பகுதியை பார்வையிட்டனர்.

துப்பாக்கி சூட்டியில் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டவர்களிடம் விசாரனை நடத்தியபின், தூத்துக்குடி மாநகராட்சியின் மேற்கு மண்டல அலுவலகத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த கார்த்திக் குடும்பத்தினருடன் தேசிய மனித உரிமை ஆணையத்தின் குழு முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது.

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.