நடிகை ஸ்ரீதேவியின் கடைசி வீடியோவை வெளியிட்ட போனி கபூர்..!

0
439

நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் மைத்துனர் மோகித் மார்வா இல்லத் திருமணத்துக்காக துபாய் சென்ற போது அங்குள்ள ‘ஜூமெய்ரா எமிரேட்ஸ் டவர்ஸ்’ என்ற நட்சத்திர ஹோட்டலில் நடிகை ஸ்ரீதேவி குடும்பத்தினருடன் தங்கினார்.

இந்த நிலையில் அன்றிரவு அவர் குளியல் அறைக்கு சென்றபோது பாத் டப்பில் மூழ்கி மரணமடைந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

ஸ்ரீதேவியின் இந்த திடீர் மரணம், அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும், திரையுலகில் இவருடன் நெருங்கிய நட்புடன் இருந்த பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இன்றுவரை ஸ்ரீதேவியின் பிரிவு இவருடைய குடும்பத்தினரை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் ஸ்ரீதேவி மற்றும் போனி கபூருக்கு நேற்று 22 வது திருமண நாள். அதனால் ட்விட்டரில் போனி கபூர் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

மேலும் ஸ்ரீதேவி இறப்பதற்கு முன் கலந்துக்கொண்ட திருமண விழாவில் எடுத்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.