திருக்கேதீஸ்வரம் பாலாவி தீர்த்தக்கரையில் முதலைகள் நடமாட்டத்தால் பரபரப்பு!! (வீடியோ)

0
515

திருக்கேதீஸ்வரம் – பாலாவி தீர்த்தத்தில் முதலைகள் நடமாட்டம் காணப்படுவதால் அங்கு நீராடுவதற்கு மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மன்னார் – திருக்கேதீஸ்வரம் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பாலாவி தீர்த்தக்கரையில் நீராடுவது வழமையாகும்.

எனினும், தற்போது தீர்த்தத்தில் முதலைகள் காணப்படுவதால், அங்கு நீராடுவதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர்.

மக்களை தௌிவூட்டுவதற்காக பாலாவி தீர்த்தத்தில் முதலைகள் காணப்படுவதாக அறிவித்தல் பதாகையொன்று நாட்டப்பட்டுள்ளது.

திருக்கேதீஸ்வரம் கோவிலுக்கு வௌிமாவட்டங்களில் இருந்தும் அதிகளவிலான மக்கள் வருகை தருகின்றனர்.

தீர்த்தத்தில் முதலைகள் இருப்பதை அறியாது எவரேனும், நீராடி ஏதேனும் ஆபத்துக்கள் ஏற்படக்கூடும் அல்லவா?

எனவே, ஏதேனும் உயிர் ஆபத்துகள் ஏற்படுவதற்கு முன்னர், பாலாவி தீர்த்தத்திலுள்ள முதலைகளை அகற்ற வேண்டியது அவசியமாகும்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.