திருமண விழாவில் நடனம்; சமூக வலைதளங்களில் ஒரே நாளில் ஹிட்டான கல்லூரி பேராசிரியர் – (வீடியோ)

0
724

மத்தியப்பிரதேசத்தில் திருமண விழா ஒன்றில் நடனமாடிய பேராசிரியர் ஒரே நாளில் மிகவும் பிரபலமாகிவிட்டார். அவரது உற்சாகமான ஆட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

கடந்த மே 31-ம் தேதி கவுதம் திரிவேதி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு வீடியோவை ஷேர் செய்து அதன் கீழ் “யுனெஸ்கோவால் தேர்வு செய்யப்பட்ட சிறப்பான திருமண வைபவ கொண்டாட்டப் பதிவு” எனக் குறிப்பிட்டிருந்தார்.

அவர் அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த சில நிமிடங்களிலேயே இணையத்தில் வைரலானதுடன் ஊடகங்களில் செய்தியானது.

இப்போது அந்தப் பேராசிரியர் சஞ்சீவ் ஸ்ரீவத்ஸவா ஊடகங்களுக்குப் பேட்டியளித்துக் கொண்டிருக்கிறார். அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி, “என்னுடைய நடன வீடியோவை இணையவாசிகள் கொண்டாடிவருகின்றனர்.

இது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. எனது வீடியோவைப் பார்த்து லைக் போட்ட ஒவ்வொருவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

அவரது மனைவி அளித்த பேட்டியில், “எனது கணவரின் நடனத்துக்கு மக்கள் அளித்துள்ள வரவேற்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவரும் மிகுந்த உறசாகத்தில் இருக்கிறார்.

அவருக்கு எப்போதுமே நடனம் மீது அதீத ஆர்வமுண்டு. நடன நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டிருக்கிறார். அதுதவிர இதுபோன்ற திருமண நிகழ்ச்சிகள், கல்லூரி விழாக்களில் நடனமாடி அனைவரையும் மகிழ்வடையச் செய்வார்” என மகிழ்ச்சியும் பெருமிதமும் பொங்கக் கூறினார்.

ட்விட்டராட்டிகள் சஞ்சய் ஸ்ரீவத்ஸாவைக் கொண்டாடி வருகின்றனர். அவர் ஆடிய அந்தப் பாடல் பாலிவுட் நடிகர் கோவிந்தா நடித்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல். அதனால், கோவிந்தாவின் உன்னத ரசிகன் என்றெல்லாம் சஞ்சய் கொண்டாடப்பட்டுவருகிறார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.