சரவணபவனில் வாடிக்கையாளர் விட்டுச் சென்ற ரூ.25 லட்சம் நேர்மையாக ஒப்படைத்த ஓட்டல் ஊழியர் -வீடியோ

0
424

வாடிக்கையாளர் விட்டுச் சென்ற 25 லட்சம் ரூபாய் இருந்த பணப் பையை நேர்மையாக ஒப்படைத்த சரவண பவன் ஓட்டல் ஊழியரை நேரில் அழைத்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

நேற்று முன்தினம் அண்ணாநகரில் உள்ள சரவணபவனில் சாப்பிட வந்த வாடிக்கையாளர் ஒருவர் 25 லட்சம் ரூபாய் பணத்தை விட்டு சென்றார்.

அதை எடுத்த ஊழியர், தமது மேலாளரிடமும், நிர்வாகத்திடமும் ஒப்படைத்தார். மறுநாள் வரை யாரும் வராததால் பணம் அடங்கிய பையை காவல்நிலையத்தில் சரவண பவன் நிர்வாகத்தினர் ஒப்படைத்தனர்.

இதனை தொடர்ந்து, பணத்தை எடுத்து ஒப்படைத்த சரவண பவன் ஊழியர் ரவி மற்றும் மேலாளர் பாலு, நிர்வாகிகளை நேரில் அழைத்த சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், அவர்களின் நேர்மையைப் பாராட்டியதோடு வெகுமதியும் அளித்தார்.

முன்னதாக 25 லட்சம் ரூபாய் பணத்திற்கு யாரும் உரிமை கோராத காரணத்தினால் அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

உரிமையாளர் வந்து ஆதாரங்களைக் காட்டி உரிமை கோரும் வரை பணம் கருவூலத்திலேயே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.