செடியில் இருந்த பூவை பரித்ததற்காக இரக்கமின்றி வயதான மாமியாரை சித்ரவதை செய்த மருமகள் – (வீடியோ)

0
1433

வயதான மாமியரை மருமகள் கொடுமை படுத்தும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது . மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள கரியா என்ற பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

நேற்று இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மருமகள் தனக்கு கோபம் வரும்போதெல்லாம் மாமியாரை தலைமுடியை பிடித்து இழுப்பதும் வாயில் குத்துவதுமாக தனது ஆத்திரத்தை காட்டுகின்றார்.

பட்டப்பகலில் வீட்டு வாசல் முன்பாக நடந்த இதை பக்கத்து வீட்டுக்காரர் ஜன்னல் வழியாக அந்த பெண்ணிற்கு தெரியாமல் பதிவு செய்துள்ளார்.

mamiவயதான அந்த பாட்டி மருமளின கொடுமையை எதிர்க்க முடியாமல் கடைசியில் அழுவதை கேட்க முடிகின்றது.

மாமியார் வீட்டில் உள்ள தோட்டத்தில் தனக்கு தெரியாமல் பூக்களை பரித்ததற்காக மருமகள் இந்த கொடுமையை நிகழ்த்தியுள்ளார். ”எப்படி நீ பூவ பரிப்ப” என அந்த பூக்களை காட்டி காட்டி மாமியாரை மருமகள் தாக்குவது காணொளியில் பதிவாகியுள்ளது.

தனத சொந்த வீட்டில் உள்ள பூவை பறித்ததற்காக இந்த கொடூரத்தை அனுபவித்துதுள்ளார் அந்த வயதான பாட்டி. பாட்டியை தினமும் இதே போன்ற இந்த பெண் கொடுமை படுத்தி வந்ததாக அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர்.

கொல்கத்தா பன்சுட்ரோனி பகுதி போலிசார் அந்த பெண்ணின் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் சப்னா என்ற அந்த பெண்ணை போலிசார் தற்போது கைது செய்துள்ளனர். அவரது மாமியாரின் பெயர் யசோதா எனத் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.