ஈரோடு அருகே குளிக்க சென்ற 3 பள்ளி மாணவர்கள் குட்டையில் மூழ்கி பலி

0
409

ஈரோடு அருகே குளிக்க சென்ற 3 பள்ளி மாணவர்கள் குட்டையில் மூழ்கி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே நல்லுரை சேர்ந்த சுரேஷ், சஞ்சய், ராஜ்குமார் என்ற மூன்று மாணவர்களும் கனகரசம்பாளையம் அரசுப்பள்ளியில் 6 வகுப்பு படித்து வருகின்றனர்.

கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திறக்கப்பட உள்ள நிலையில், நேற்று மாலை இந்த 3 பேர் உட்பட 5 பேர், அருகாமையில் உள்ள குட்டையில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

குட்டையில் வண்டல்மண் அள்ளியபோது, அதனை சமப்படுத்தாமல் விட்டதால் குண்டும் குழியுமாக இருந்துள்ளது. மேலும் கோடையில் நல்ல மழை பெய்ததால் குட்டையில் நீரின் அளவும் உயர்ந்திருந்தது.

இதனை சற்றும் அறிந்திராத கெளதம், சஞ்செய், ராஜ்குமார் என 3 பேரும் குளிப்பதற்காக வேகமாக குட்டையில் இறங்கியுள்ளனர்.

ஆனால் நீரின் அளவு அதிகமாக இருந்ததால்,வெளியில் வரமுடியாமல் தத்தளித்துள்ளனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற இரு மாணவர்கள் கிராம மக்களுக்கு தகவல் கொடுக்கவே, விரைந்து வந்த கிராமத்தினர் தீவிரமான மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் மீட்பதில் சிரமம் ஏற்பட்டதால் 3 மாணவர்களும் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

இதற்கிடையில் சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த மாணவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.