மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் பேசிய ஆடியோ. வெளியீடு!! (காணொளி இணைப்பு)

0
352

2016-ம் ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஜெயலலிதா பேசிய ஆடியோ ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காததால் அவருடைய மரணம் நிகழ்ந்தது. ஜெயலலிதா மரணத்துக்குப் பின் அ.தி.மு.க-வில் குழப்பங்கள் ஏற்பட்டன.

கட்சி பிரிந்தது. கூடவே, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓ.பி.எஸ் சந்தேகம் எழுப்பியதன் பயனாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், தனிநபர் விசாரணை ஆணையத்தைத் தமிழக அரசு அமைத்தது.

அதன்படி, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தீபா, விவேக் ஜெயராமன், அப்போலோ மருத்துவர்கள் எனப் பலரும் விளக்கமளித்து வருகின்றனர்.

சசிகலாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அவருக்குப் பதிலாக அவரது வழங்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆவணங்களைத் தாக்கல் செய்துவருகிறார்.

இதற்கிடையே, செப்டம்பர் 27-ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டபோது ஜெயலலிதா பேசிய ஆடியோவை அவரது மருத்துவரும் சசிகலா உறவினருமான சிவக்குமார், ஆறுமுகசாமி ஆணையத்திடம் இன்று அளித்துள்ளார்.

அந்த ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதேபோல், ஆகஸ்ட் 2, 2016-ம் அன்று உணவருந்திய ஜெயலலிதாவின் உணவுப்பட்டியலை ஆறுமுகசாமி ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, அவர் பின்பற்றிய உணவுப்பட்டியல் தான் இது. இந்தப் பட்டியல் தற்போது வெளியானது அரசியல் விமர்சகர்கள் மத்தியில் சந்தேகம் நிலவி வருகிறது. தூத்துக்குடி சம்பவத்தை திசை திருப்பவே இந்த ஆடியோ வெளியிடப்பட்டதா என தற்போது கேள்விகள் எழுந்தன.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.